பொது செய்தி

இந்தியா

வெறுப்புணர்வை துாண்டும் 3 கோடி தகவல் நீக்கம்: பேஸ்புக்

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :'பேஸ்புக்' வலைதளத்தில், கடந்த மூன்று மாதங்களில், உலகளவில் பகிரப்பட்ட, 3.15 கோடி வெறுப்புணர்வை துாண்டும் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் நிறுவனத்தின் ஏப்., - ஜூன் காலாண்டு செயல்பாடுகள் பற்றி அதன் துணை தலைவர் கய் ரோசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தாண்டு, ஏப்., - ஜூன் காலாண்டில், பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட,
வெறுப்புணர்வு,3 கோடி தகவல் நீக்கம்: பேஸ்புக்

புதுடில்லி :'பேஸ்புக்' வலைதளத்தில், கடந்த மூன்று மாதங்களில், உலகளவில் பகிரப்பட்ட, 3.15 கோடி வெறுப்புணர்வை துாண்டும் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் நிறுவனத்தின் ஏப்., - ஜூன் காலாண்டு செயல்பாடுகள் பற்றி அதன் துணை தலைவர் கய் ரோசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்தாண்டு, ஏப்., - ஜூன் காலாண்டில், பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட, 3.15 கோடி வெறுப்புணர்வு தகவல்கள் அகற்றப்பட்டுள்ளன. இதே காலத்தில், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் நீக்கப்பட்ட வெறுப்புணர்வு தகவல்கள், 63 லட்சத்தில் இருந்து, 98 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதே காலாண்டில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கொரோனா குறித்து தவறாக வெளியிடப்பட்ட இரண்டு கோடி தகவல்கள் நீக்கப்பட்டுஉள்ளன. அதுபோல, தடுப்பூசி பற்றி உண்மைக்கு மாறான 3,000 பதிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த காலாண்டில், வெறுப்புணர்வை துாண்டும் 52 லட்சம் கருத்துகளை வெளியிட்டோர் மீது பேஸ்புக் நடவடிக்கை எடுத்துள்ளது. அதே போல், இன்ஸ்டாகிராமில் வெறுப்புணர்வை துாண்டும் 3.67 லட்சம் பதிவுகள்.தற்கொலை மற்றும் உடலை வருத்திக் கொள்வது தொடர்பான 30 லட்சம் பதிவுகள்; வன்முறை மற்றும் ஆபாசமான 76 லட்சம் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
20-ஆக-202107:55:56 IST Report Abuse
Ram பேஸ்புக் த்விட்டேர் போன்ற வலைத்தளங்களை தடைசெய்தாலே நாட்டில் மக்கள் நிம்மதியாக இருப்பர் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X