இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கு இழப்பீடு வினியோகத்தை நிறுத்த உத்தரவு| Dinamalar

இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கு இழப்பீடு வினியோகத்தை நிறுத்த உத்தரவு

Added : ஆக 19, 2021
Share
புதுடில்லி:இத்தாலி கடற்படை வீரர்களால், கேரளாவைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில், படகின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள கடல் பகுதி வழியாக, 2012ல், இத்தாலியைச் சேர்ந்த கப்பல் வந்துள்ளது. அப்போது, அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை, கடற்கொள்ளையர்கள் என நினைத்து, அந்தக் கப்பலில் இருந்த

புதுடில்லி:இத்தாலி கடற்படை வீரர்களால், கேரளாவைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில், படகின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள கடல் பகுதி வழியாக, 2012ல், இத்தாலியைச் சேர்ந்த கப்பல் வந்துள்ளது. அப்போது, அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை, கடற்கொள்ளையர்கள் என நினைத்து, அந்தக் கப்பலில் இருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இதில் இரண்டு மீனவர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில், கடந்த ஜூன் மாதத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி உயிரிழந்த இரண்டு மீனவர்களின் குடும்பத்தாருக்கு, தலா, 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர்கள் பயணம் செய்த மீன்பிடி படகின் உரிமையாளருக்கு, 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.இந்த இழப்பீட்டு தொகை உரிய முறையில் வினியோகிப்பதை, கேரள உயர் நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் நடந்தபோது, அந்தப் படகில் இருந்த, மேலும் ஏழு மீனவர்கள், தங்களுக்கும் இழப்பீடு கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இதை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ராமசுப்ரமணியன் அமர்வு, இது குறித்து பதிலளிக்கும் படி, படகின் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.மேலும், படகு உரிமையாளருக்கான, 2 கோடி ரூபாய் இழப்பீடு வினியோகிப்பதை நிறுத்தி வைக்கும் படி, கேரள உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X