பொது செய்தி

தமிழ்நாடு

வரவு, செலவு தெரிஞ்சுக்கணும்: பொதுமக்கள் முன் அனுமதி பெறணும்: ஊராட்சி தலைவர்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:'ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ள வேண்டும்' என, மருதுார் ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ''முறையான அனுமதி பெற்று அதிகாரிகள் முன்னிலையில், அனைத்து ஆவணங்களும் பார்வைக்கு கொடுக்கப்படும்,'' என, ஊராட்சி தலைவர் பூர்ணிமா தெரிவித்தார்.காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதுார் ஊராட்சியில், பிளிச்சிங் பவுடர், கிருமிநாசினி
 வரவு, செலவு தெரிஞ்சுக்கணும்: பொதுமக்கள் முன் அனுமதி பெறணும்: ஊராட்சி தலைவர்

மேட்டுப்பாளையம்:'ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ள வேண்டும்' என, மருதுார் ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ''முறையான அனுமதி பெற்று அதிகாரிகள் முன்னிலையில், அனைத்து ஆவணங்களும் பார்வைக்கு கொடுக்கப்படும்,'' என, ஊராட்சி தலைவர் பூர்ணிமா தெரிவித்தார்.காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதுார் ஊராட்சியில், பிளிச்சிங் பவுடர், கிருமிநாசினி வாங்கியதிலும், குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்தல், வீடு கட்ட வரைபடங்கள் அனுமதி கொடுத்தல் உட்பட, பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்துள்ளது என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.''முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை; அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன,'' என, ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் கூறினார். நேற்று, மாவட்ட கவுன்சிலர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர் சரவணன் மற்றும் ஜெயராமன், கோபிநாத் உட்பட, 10த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மருதுார் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று, ஆவணங்களை பார்க்க வேண்டும் என கூறினர். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்கள், அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆவணங்களை பார்க்க அனுமதி கோரி, ஊராட்சி செயலாளர் குருந்தாசலத்திடம், பொதுமக்கள் மனு கொடுத்த பின் கலைந்து சென்றனர்.மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் கூறுகையில், ''ஊராட்சியின் ஆவணங்களை பொதுமக்கள் பார்க்க வேண்டுமென்றால், மனு கொடுத்து அனுமதி பெற வேண்டும். அதன் பின், அதிகாரிகள் முன்னிலையில் ஆவணங்கள் காண்பிக்கப்படும். எனவே, பொதுமக்கள் ஆவணங்களை பார்க்க முன் அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X