பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகார உச்சவரம்பு உயர்வுக்கு கோவை 'கிரெடாய்' வரவேற்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை:உள்ளூர் திட்ட குழுமத்திற்கு அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்பை உயர்த்தி, தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளதற்கு, கோவை 'கிரெடாய்' அமைப்பு, வரவேற்பு தெரிவித்துள்ளது.கோவை 'கிரெடாய்' தலைவர் குகன் இளங்கோ கூறியதாவது:கோவையில் உள்ளூர் திட்டக்குழுமத்தின், அங்கீகார அதிகார வரம்பை உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தோம். இதன் அடிப்படையில், சென்னை, ஊரக மற்றும் நகர திட்ட

கோவை:உள்ளூர் திட்ட குழுமத்திற்கு அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்பை உயர்த்தி, தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளதற்கு, கோவை 'கிரெடாய்' அமைப்பு, வரவேற்பு தெரிவித்துள்ளது.கோவை 'கிரெடாய்' தலைவர் குகன் இளங்கோ கூறியதாவது:கோவையில் உள்ளூர் திட்டக்குழுமத்தின், அங்கீகார அதிகார வரம்பை உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தோம். இதன் அடிப்படையில், சென்னை, ஊரக மற்றும் நகர திட்ட இயக்குனரகம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி, உள்ளூர் திட்டக்குழுமங்கள், கட்டடங்கள், லே - அவுட் அனுமதி மற்றும் நில உட்பிரிவுகளுக்கு அனுமதி அளிக்க, அதிகாரம் அளிக்கப்படுகிறது.புதிய வழிகாட்டுதல்படி, குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவனங்களின் கட்டடங்கள், அதன் பரப்பளவு, 2,500 சதுர மீட்டருக்குள் உள்ளவற்றுக்கு, உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதி வழங்கலாம்.முன்பு இதன் அளவு, 1,500 சதுர மீட்டராக இருந்தது. 'சிப்காட்', 'சிட்கோ' கட்டடங்கள் தவிர, தொழிற்சாலை கட்டடங்களுக்கும், 2,500 சதுர மீட்டர் வரை உள்ளுர் திட்ட குழுமமே அங்கீகாரம் வழங்கலாம்.மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், நில உட்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்பு, 5 ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது.கிராமப்புற பகுதிகளில், 10 ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்று அலைய தேவையில்லை. விரைவான அனுமதி பெற்று மக்கள் பயன்பெற, இது பேருதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X