குஜராத்தின் மதமாற்ற தடை சட்டம் சில பிரிவுகளை செயல்படுத்த தடை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ஆமதாபாத்:குஜராத் அரசின் மதமாற்ற தடை சட்டத்தின் சில பிரிவுகளை செயல்படுத்த, குஜராத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது, மாநில அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.மோசடிகுஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. திருமணத்துக்காக கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடுப்பதற்காக, மதமாற்ற தடை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள்

ஆமதாபாத்:குஜராத் அரசின் மதமாற்ற தடை சட்டத்தின் சில பிரிவுகளை செயல்படுத்த, குஜராத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது, மாநில அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.மோசடிகுஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. திருமணத்துக்காக கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடுப்பதற்காக, மதமாற்ற தடை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த திருத்த சட்டம், கடந்த ஜூன் 15ல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின் கடுமையான பல பிரிவுகளை எதிர்த்து, ஜமாயத் உலேமா ஹிந்த் அமைப்பின் குஜராத் கிளை சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதை விசாரித்த, தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு அளித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

திருமணம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி, ஆசை காட்டி, மோசடி வழியில் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தின் சில பிரிவுகள் ஏற்புடையதாக இல்லை. வலியுறுத்தல்அதனால், இடைக்கால நிவாரணமாக இந்த குறிப்பிட்ட சட்டப் பிரிவுகளை செயல்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.இந்த சட்டப் பிரிவின்படி துன்புறுத்தப்படுவதை தடுக்கவே, இந்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த திருத்த சட்டம் தொடர்பாக விரிவாக விசாரிக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

இந்த உத்தரவு, மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், சட்ட நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 'சட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்திலும், இது போன்ற மதமாற்ற தடை சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X