பொது செய்தி

தமிழ்நாடு

பணத்துக்கு பதிலாக தரமான பொருட்கள்: ரேஷனில் வினியோகிக்க அரசுக்கு யோசனை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு;குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக, ரேஷன்கடைகள் வாயிலாக, தரமான அத்தியாவசிய பொருள்களை வினியோகிக்கலாம், என, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: ரேஷன்

கிணத்துக்கடவு;குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக, ரேஷன்கடைகள் வாயிலாக, தரமான அத்தியாவசிய பொருள்களை வினியோகிக்கலாம், என, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: ரேஷன் கடைகளில், பொருள் வாங்க வரும் வயதானவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு கை விரல் ரேகைகள் மறைந்திருக்கும். இதனால், ரேஷன் பொருள் பெறுவதில் ஏற்படும் சிக்கலால், ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை தொடர்ந்தது.வயதானவர்கள் நிலை பற்றி, மாவட்ட வழங்கல் அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் மற்றும் கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இதையடுத்து, வயதானவர்கள், உடல் நிலை பாதித்தவர்களுக்கு பதிலாக, வேறொருவருக்கு கடிதம் அளித்து, கை ரேகை வைத்து பொருள்களை பெறலாம் என, உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.அதேபோல, குடும்ப பெண்களுக்கு, மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில், பயனாளிகளுக்கு ரொக்கமாக வழங்காமல், குடும்பத்துக்கு தேவையான, சர்க்கரை, டீ துாள், பருப்பு, தேங்காய் எண்ணெய், கருப்பட்டி, கோதுமை மற்றும் மளிகை பொருள்களை வினியோகிக்கலாம்.பொருட்களை தரமாக கொடுத்தால், மக்களுக்கு பயனளிக்கும். இதனால், குடும்பச்செலவும் மிச்சமாகும். இத்திட்டம் குறித்து, தமிழக முதல்வரும், உணவுத்துறை அமைச்சரும் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X