பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... ரோட்டில் முட்டுக்கட்டையால் அவதி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில், ரயில்வே மேம்பால பணிகள் நடக்கும் நிலையில், பிரதான ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நகரில் இருந்து பாலக்காடு ரோட்டை அணுக, கோவை ரோட்டில் இருந்து, போக்குவரத்து கழக டிப்போ ரோடு, வடுகபாளையம், காந்தி நகர் வழித்தடத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.இந்த ரோட்டில், வடுகபாளையத்தில் இருந்து காந்தி நகர் செல்லும்
 செய்திகள் சில வரிகளில்... ரோட்டில் முட்டுக்கட்டையால் அவதி

பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில், ரயில்வே மேம்பால பணிகள் நடக்கும் நிலையில், பிரதான ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நகரில் இருந்து பாலக்காடு ரோட்டை அணுக, கோவை ரோட்டில் இருந்து, போக்குவரத்து கழக டிப்போ ரோடு, வடுகபாளையம், காந்தி நகர் வழித்தடத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.இந்த ரோட்டில், வடுகபாளையத்தில் இருந்து காந்தி நகர் செல்லும் வழியில், டயமண்ட் சிட்டி குடியிருப்புக்கு அருகே, நடு ரோட்டில் பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி சிதைந்துள்ளது. இது குறித்து, எச்சரிக்க கூட அதிகாரிகள் தடுப்பு எதுவும் அமைக்காத நிலையில், அப்பகுதி மக்கள், மரக்கட்டை, கற்களை போட்டு வைத்துள்ளனர்.இரண்டு ஆண்டுகளாக இந்நிலை நீடிக்கிறது. சிதைந்த பாதாள சாக்கடை மூடியையும், ரோட்டையும் சீரமைக்காத அதிகாரிகளால், கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு

கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடி ஊராட்சி, தேவேந்திரகுல மயானம் மற்றும் குள்ளநரிமேடு ஆகிய இடங்களில், கோதவாடி ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் அமைக்க, தலா, எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இவ்விரு இடங்களிலும், தடுப்பணை அமைக்கும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, உதவித்தலைவர் பரமசிவம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதேபோல, நெ.10 முத்துாரில், மாவட்ட கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாயில், தரைமட்ட தொட்டி அமைக்க பூமி பூஜை நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ராஜன், ஊராட்சி தலைவர்கள் பிரபு, செந்தில்குமார், அசோக்குமார் பங்கேற்றனர்.

சிறந்த சேவைக்கு பாராட்டு

வால்பாறை, அப்பர்பாரளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ஆசீர்வாதம். இவர் கடந்த, 1978ம் ஆண்டு முதல் சாரண, சாரணிய இயக்கத்தில், சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்.பணி ஒய்வுக்கு பிறகும், தொடர்ந்து சாரண, சாரணியர் இயக்கத்தில், பள்ளி மாணவர்களின் தேசப்பற்று உயர பணியாற்றுகிறார். இவரது சேவையை பாராட்டி, சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், கல்வி அமைச்சர் மகேஸ், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பாதுகாப்பாக இருக்க 'அட்வைஸ்'

வால்பாறை அடுத்துள்ள, கருமலை எஸ்டேட் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் கலந்து கொண்டார்.அவர், பேசும் போது, ''எஸ்டேட் தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் போது, குழந்தைகளை பாதுகாப்பாக இருக்க அறிவுரை கூறுங்கள். பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும், குழந்தைகளிடம் சிறிது நேரம் மனம் விட்டு அன்பாக பேசுங்கள்.பெண் குழந்தைகளிடம் யாரேனும் தவறாக நடக்க முயன்றால், உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசில் புகார் கொடுக்க, ஒரு போதும் தயங்க கூடாது,'' என்றார்.

காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, கடந்த, இரண்டு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஆழியாறு சோதனைச்சாவடியில், கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர். வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு, தடையை மீறி அனுமதிக்கின்றனர்.போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், வால்பாறையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலெக்டரின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், ஆழியாறு சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

மடத்துக்குளம் தாலுகா அலுவலக பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ராஜவீதி செல்வதற்கு பொது வழித்தடம் உள்ளது .இதன் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., வினர் அதிருப்தி தெரிவித்ததோடு நேற்று பேரூராட்சி அலுவலகம் முன் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ., வினர் கூறுகையில், 'மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு தொடங்கி, 8வது வார்டு வரை வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய பாதையை ஆக்கிரமித்து, தாலுகா அலுவலகம் எதிரில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனியார் ஹோட்டல் கட்டும் பணி நடக்கிறது. இது தவிர இந்த ரோட்டில் உள்ள பள்ளிவாசல் தொடங்கி கழுகரை ரோடு இணையும் பகுதி வரை பல இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது.இதனால் பொதுமக்களுக்கு பலவித சிரமங்கள் ஏற்படுகிறது' என்றனர்.

குழாய் அமைக்க எதிர்பார்ப்பு

உடுமலையை அடுத்த அமராவதி வனச்சரகத்தில், கரட்டுப்பதி, தளிஞ்சிவயல், தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்துார் உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன. பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதிகளில், சோலார் கட்டமைப்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், வன அனுபவ உரிமையின் பேரில், விவசாய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அந்த நிலத்தில், பீன்ஸ், நெல் உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.அவ்வப்போது, மழையின்மை காரணமாக, வறட்சியால், விளைநிலங்கள் பாதிப்பதால், அருகே உள்ள சிற்றாறுகளில், நிரந்தர குழாய் இணைப்பு செய்து தர, பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X