வெள்ளை ஈ கட்டுப்படுத்த கிரைசோபா எதிர் உயிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளை ஈ கட்டுப்படுத்த 'கிரைசோபா' எதிர் உயிரி

Added : ஆக 19, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள அனைத்து தென்னந்தோப்புகளிலும், வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. மரங்களின் ரகங்களுக்கு ஏற்ப, தாக்குதலில் அளவும், பாதிப்பும் உள்ளது. இதனால், மரங்களின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி பாதிப்பதால், பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள் அலைமோதுகின்றனர்.வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, எதிர் உயிரியான 'கிரைசோபா'வை தோப்புகளில் அதிகரிக்க,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள அனைத்து தென்னந்தோப்புகளிலும், வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. மரங்களின் ரகங்களுக்கு ஏற்ப, தாக்குதலில் அளவும், பாதிப்பும் உள்ளது. இதனால், மரங்களின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி பாதிப்பதால், பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள் அலைமோதுகின்றனர்.வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, எதிர் உயிரியான 'கிரைசோபா'வை தோப்புகளில் அதிகரிக்க, வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர். இந்த 'கிரைசோபா' உயிரியின் முட்டைகள், கோவை வேளாண் பல்கலை பூச்சியியல் துறையால் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.ஒரு ஏக்கருக்கு, ஆயிரம் முட்டைகள் வரை பயன்படுத்தலாம். ஆயிரம் முட்டைகள், 300 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், பல்கலையின் பூச்சியியல் துறையை நேரிலோ, அல்லது 0422 6611214 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X