பொது செய்தி

இந்தியா

'சீக்கியர்கள் பயப்பட வேண்டாம்' தலிபான்கள் நேரில் உறுதி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவுக்கு நேரில் சென்ற தலிபான்கள், 'சீக்கியர்கள் பயப்பட வேண்டாம்; பாதுகாப்பு அளிப்போம்' என, உறுதி அளித்துள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் முழுதும், தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என, அங்குள்ள ஹிந்துக்களும், சீக்கியர்களும் அச்சம்
 'சீக்கியர்கள் பயப்பட வேண்டாம்' தலிபான்கள் நேரில் உறுதி

புதுடில்லி:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவுக்கு நேரில் சென்ற தலிபான்கள், 'சீக்கியர்கள் பயப்பட வேண்டாம்; பாதுகாப்பு அளிப்போம்' என, உறுதி அளித்துள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் முழுதும், தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என, அங்குள்ள ஹிந்துக்களும், சீக்கியர்களும் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தியாவுக்கு திரும்புவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.'தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில், 200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களை மீட்க வேண்டும்' என, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், காபூலில் உள்ள குருத்வாராவுக்கு தலிபான்கள் சென்றுள்ளனர். குருத்வாரா தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளனர். 'தங்களுடைய பாதுகாப்பு குறித்து சீக்கியர்கள் அச்சப்பட தேவையில்லை' என, அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.இது தொடர்பான, 'வீடியோ'வை, தலிபான் செய்தித் தொடர்பாளர் நயீம், சமூக வலை தளத்தில் வெளியிட்டு உள்ளார். அகாலி தளத்தின் மூத்த தலைவரும், டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவருமான மஜிந்தர் சிங் சிர்சாவும், அந்த 'வீடியோ'வை, சமூக வலை தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

'காபூலில் உள்ள குருத்வாரா நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். 'அச்சப்பட தேவையில்லை என தலிபான்கள் கூறியுள்ளதாக குருத்வாரா நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். 'நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என, அந்த பதிவில் சிர்சா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X