பொது செய்தி

தமிழ்நாடு

அட்டகட்டியில் 'ஆர்க்கிட்டோரியம்' அமைப்பு:வனக்கல்வி, ஆராய்ச்சி பயன்பாட்டிற்கு திட்டம்: ஆஹா... அற்புதம்!

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பல வண்ண மலர் செடிகளை ஒரே இடத்தில் காணும் வகையில், அட்டகட்டியில், 'ஆர்க்கிட்டோரியம்' அமைக்கப்பட்டு உள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன் உள்ள வகையில், இவை பராமரிக்கப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், உலகின் மிக அரிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக விளங்குகிறது. வனப்பகுதியில், பல்வேறு வன உயிரினங்கள் வாழும் சூழ்நிலை
அட்டகட்டியில் 'ஆர்க்கிட்டோரியம்' அமைப்பு:வனக்கல்வி, ஆராய்ச்சி பயன்பாட்டிற்கு திட்டம்: ஆஹா... அற்புதம்!

பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பல வண்ண மலர் செடிகளை ஒரே இடத்தில் காணும் வகையில், அட்டகட்டியில், 'ஆர்க்கிட்டோரியம்' அமைக்கப்பட்டு உள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன் உள்ள வகையில், இவை பராமரிக்கப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், உலகின் மிக அரிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக விளங்குகிறது. வனப்பகுதியில், பல்வேறு வன உயிரினங்கள் வாழும் சூழ்நிலை உள்ளதுடன், பல்வேறு வகையான தாவர இனக்காடுகள் உள்ளது.

வறண்ட முட்புதர்காடுகள், இலையுதிர்காடுகள், ஈரப்பதமான இலையுதிர்காடுகள், பசுமை மாறாக்காடுகள், வெப்ப மண்டல மழைக்காடுகளான சோலைக்காடுகள், புல்வெளிகள் என பறந்து விரிந்த வனப்பகுதியாக விளங்குகிறது. பல வண்ண மலர்த்தாவரங்களை புலிகள் காப்பகம் தன்னகத்தே கொண்டுள்ளது.சுற்றுலா பயணிகளும், ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு இடங்களில், அமைந்துள்ள பல வண்ண மலர்த்தாவரங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்புகள் தற்போது இல்லை.மலர் செடிகள்இத்தகைய பன்முகத்தன்மையுடைய பல வண்ண மலர்த்தாவரங்கள் ஒரே இடத்தில் காணும் வகையில், அட்டகட்டியில், 'ஆர்கிட் மரச்செடி அரங்கம்' அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கில், அறிவியல் ரீதியான பல வண்ண மலர் தாவரங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. அறைக்குள் சென்றாலே வண்ண மயமான மலர்கள் கவர்ந்து இழுப்பதுடன், அவை பற்றிய தகவல்களை கேட்டறிய ஆர்வத்தை துாண்டுகிறது.'ஆர்கிட்டோரியம்' பின்பக்கம் புல்வகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வனத்தில் கடமான், புள்ளி மான், காட்டுமாடு போன்ற விலங்குகள் எவ்வகையான புற்களை அதிகளவு உட்கொள்கின்றன என ஆராய்ச்சிக்காக புல் வகைகள் வளர்க்கப்படுகின்றன.ஆராய்ச்சி முடிவின் படி, வனத்தில் உணவுச்சங்கிலி மேம்படுத்த முயற்சி எடுக்கப்படுகிறது.

62 வகை செடிகள்

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கல்வி, பொழுது போக்கு மற்றும் அறிவியல் ரீதியான மலர் தாவரங்கள் கொண்ட 'ஆர்கிட்டோரியம்' அமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் மொத்தம், 146 வகையான 'ஆர்க்கிட்' உள்ளது. அதில், 68 அழியும் தருவாயில் உள்ளன.அவற்றை வனப்பகுதியில் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 62 வகையான செடிகள், ஆர்க்கிட்டோரியத்தில் வைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியை போன்று சீதோஷ்ண நிலை இருக்க வேண்டும் என்பதற்காக, 'தானியங்கி இயந்திரம்' பொருத்தி, தாவரங்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்துகள் வழங்கப்படுகிறது.விபர குறிப்புதட்பவெப்பநிலைக்கு ஏற்ப இவை மாறிக்கொள்ளும். உட்பகுதி குளிர்ந்த நிலையில் இருக்கும். ஒவ்வொரு மலர் செடியும், ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்ப பூக்கும் தன்மை கொண்டது. வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளும் பார்வையிட அனுமதி அளிக்கப்படும்.மேலும், அரங்கத்தில் உள்ள மலர் செடிகள் குறித்த, புகைப்படத்துடன் கூடிய விபரங்களுடன் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, தெரிவித்தனர்.மருத்துவ குணமும் இருக்கு!'ஆர்க்கிட்' மலர்ச்செடிகள், உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக காணப்படுகின்றன. இந்தியாவில், 1,256 சிற்றினங்கள், 388 'ஆர்க்கிட்' உள்ளூர் இனங்கள் உள்ளன.மரத்தை தொற்றி வளரும் வகை, தரையில் இருக்கும் வகை உள்ளது. சில வகையான 'ஆர்க்கிட்' செடிகளை உள்ளூர் பழங்குடியினர் பாரம்பரிய மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட 'ஆர்க்கிட்' இனங்கள் உள்ளன. அவற்றில், 146 இனங்கள், 59 வகைகளை சேர்ந்தவை, ஆனைமலை புலிகள் காப்பக காடுகளில் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X