கொரோனாவை வெல்ல தடுப்பூசியே ஆயுதம்: நகரம், கிராமத்தில் நேற்று 4,400 டோஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை வெல்ல தடுப்பூசியே ஆயுதம்: நகரம், கிராமத்தில் நேற்று 4,400 'டோஸ்'

Added : ஆக 19, 2021
Share
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில், 4,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பிட்ட வார்டுகளுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தடுப்பூசி போடும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.அதில், வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, குமரன் நகராட்சி தொடக்கப்பள்ளி என இரண்டு இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
 கொரோனாவை வெல்ல தடுப்பூசியே ஆயுதம்: நகரம், கிராமத்தில் நேற்று 4,400 'டோஸ்'

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில், 4,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பிட்ட வார்டுகளுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தடுப்பூசி போடும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.அதில், வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, குமரன் நகராட்சி தொடக்கப்பள்ளி என இரண்டு இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. மக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி, வடுகபாளையம் முகாமை ஆய்வு செய்தார். மக்களை காத்திருக்க வைக்காமல், பதிவு செய்யும் பணிகள் துரிதமாக நடப்பதை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். நகர்நல அலுவலர் ராம்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உடன் இருந்தனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வடுகபாளையத்தில்,ஒ ன்று மற்றும் இரண்டாவது வார்டு மக்களுக்கும்; குமரன் நகரில், 23வது வார்டு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சி.டி.சி., டெப்போவிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மொத்தம், 2,600 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன,' என்றனர்.கிராமங்களில் முகாம்பொள்ளாச்சி ஒன்றிய கிராமங்களில் நேற்று சிறப்பு முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வடக்கு ஒன்றியத்தில் ஆலாம்பாளையம், சுந்தரகவுண்டனுார், போடிபாளையம்; தெற்கு ஒன்றியத்தில் சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி, கோலார்பட்டி கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.இந்த முகாம்களில், தலா, 300 'டோஸ்' என மொத்தம், 1,800 பேருக்கு நேற்று 'கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம்கள் மற்றும் ஊசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், இது வரை முகாம் நடத்தாத கிராமங்களை தேர்வு செய்து, அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்த, ஒன்றிய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X