ஓணம் சேலை உற்பத்தி குறைவு: கைத்தறி நெசவாளர்கள் கவலை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
நெகமம்:கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு, நெகமம் பகுதியில் இருந்து, சேலை ரகங்கள், 25 சதவீதம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக, கைத்தறி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.நெகமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கைத்தறி சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கொரோனா தொற்று பரவலால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நெகமம் காட்டன் சேலைகள்

நெகமம்:கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு, நெகமம் பகுதியில் இருந்து, சேலை ரகங்கள், 25 சதவீதம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக, கைத்தறி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.நெகமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கைத்தறி சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கொரோனா தொற்று பரவலால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நெகமம் காட்டன் சேலைகள் உற்பத்தி குறைந்து, விற்பனை முடங்கியது.கடந்தாண்டு, கேரளாவில், ஓணம் சீசனின் போது, உற்பத்தி முடங்கிய நிலையில் கைத்தறி மற்றும் ஓணத்துக்கான பிரத்யேக சேலை ரகங்கள் விற்பனையாகவில்லை. நடப்பாண்டு குறைந்தளவு சேலை ரகங்களே கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் மற்றும் பாலக்காடு பகுதியில், ஓணத்தை முன்னிட்டு, ஓரளவு ஜவுளிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கொரோனா அச்சத்துக்கு இடையேயும், புத்தாடைகள் வாங்க முன் வரத்துவங்கியுள்ளனர். கைத்தறி சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:ஓணத்துக்கு மட்டுமல்லாது, கேரள மக்கள் வாழும் அரேபிய நாடுகளுக்கும், இங்கிலாந்து, அமெரிக்காவுக்கும் நெகமம் கைத்தறி சேலை ரகங்கள் அனுப்பப்படும்.குறிப்பாக, காட்டன் சேலைகள், கைத்தறி பட்டு சேலைகள், ஓணம் பாரம்பரிய சேலைகள் அனுப்பப்படும். நடப்பாண்டு, வழக்கமான விற்பனை அளவில், 25 சதவீத சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X