பொது செய்தி

தமிழ்நாடு

திரவ வடிவிலான 'நானோ யூரியா' அறிமுகம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
உடுமலை:பயிர்களுக்கு தேவையான தழைச்சத்துக்களை வழங்கும், புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, திரவ வடிவிலான 'நானோ யூரியா'வை, இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம்(இப்கோ) அறிமுகம் செய்துள்ளது.யூரியா உரத்தை மேல் உரமாக இடலாம்; ஒரு லிட்டர் தண்ணீரில், 4 மி.லி., வீதம், 'நானோ யூரியா' உரத்தை கலந்து, பயிர்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். இதன் வாயிலாக, உடனடியாக தழைச்சத்து

உடுமலை:பயிர்களுக்கு தேவையான தழைச்சத்துக்களை வழங்கும், புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, திரவ வடிவிலான 'நானோ யூரியா'வை, இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம்(இப்கோ) அறிமுகம் செய்துள்ளது.யூரியா உரத்தை மேல் உரமாக இடலாம்; ஒரு லிட்டர் தண்ணீரில், 4 மி.லி., வீதம், 'நானோ யூரியா' உரத்தை கலந்து, பயிர்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். இதன் வாயிலாக, உடனடியாக தழைச்சத்து பயிர்களுக்கு கிடைக்கிறது.ஒரு ஏக்கருக்கு, 500 மி.லி., 'நானோ யூரியா' உரத்தை தண்ணீர் கலந்து, கைத்தெளிப்பான் வாயிலாக, இலைகளில்படும் படி தெளிக்கலாம்.சாதாரணமாக, ஒரு மூட்டை யூரியா உரம் இடுவதால் கிடைக்கும் பயன்; இந்த 'நானோ யூரியா' உரம் வழியாக கிடைக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறுகையில், ''உடுமலை பகுதிகளில், நானோ யூரியா தேவையான அளவு இருப்பு உள்ளது. இதனை வாங்கி பயன்படுத்தவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X