பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் உற்பத்திக்கு செயல்விளக்க பயிற்சி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
உடுமலை:உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், சிறு தானியங்கள் அவசியம் மற்றும் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.உடுமலை, மானுப்பட்டியில், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம், ஊட்டச்சத்துமிக்க சிறு தானியம் உற்பத்தி திட்டத்தின் கீழ், சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்வதன் அவசியம், ஆரோக்கியமான வாழ்விற்கு, இந்த

உடுமலை:உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், சிறு தானியங்கள் அவசியம் மற்றும் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.உடுமலை, மானுப்பட்டியில், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம், ஊட்டச்சத்துமிக்க சிறு தானியம் உற்பத்தி திட்டத்தின் கீழ், சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்வதன் அவசியம், ஆரோக்கியமான வாழ்விற்கு, இந்த தானியங்கள் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி, வட்டாரத்தில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து விளக்கினார்.தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:உணவில் அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொள்கிறோம். அவற்றில், கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் மட்டுமே கிடைக்கிறது. ஆரோக்கியத்திற்கு அவசிய தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் சிறு தானியங்களில் மட்டுமே கிடைக்கிறது. சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, குதிரைவாலி ஆகியவற்றில் அதிகளவு உள்ளதால், இவற்றை நமது உணவில் தினமும்சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, கூறினார்.மேலும், கோடை உழவு செய்தல், பண்ணை குட்டைகள் அமைத்தல், ஊட்டமேற்றிய தொழு உரம், செறிவூட்டிய உயிர் உரம் தயாரித்து இடுதல், உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை குறித்து விளக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X