அரசியல் செய்தி

தமிழ்நாடு

100 நாள் ஆட்சியில் வேதனை : கவர்னரிடம் அ.தி.மு.க., மனு

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (10+ 136)
Share
Advertisement
சென்னை :''தி.மு.க.,வின்,100 நாள் ஆட்சியில், மக்கள் வேதனையும், சோதனையும் அடைந்துள்ளனர்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார். அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், நேற்று கட்சி நிர்வாகிகளுடன், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.ஊழல், வசூல், பழிவாங்குதல் மற்றும் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துதல் என, தி.மு.க.,
100 நாள் ஆட்சி,வேதனை : கவர்னர், அ.தி.மு.க., மனு

சென்னை :''தி.மு.க.,வின்,100 நாள் ஆட்சியில், மக்கள் வேதனையும், சோதனையும் அடைந்துள்ளனர்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார். அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், நேற்று கட்சி நிர்வாகிகளுடன், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.

ஊழல், வசூல், பழிவாங்குதல் மற்றும் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துதல் என, தி.மு.க., அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை விளக்கி மனு அளித்தனர்.பின், பழனிசாமி அளித்த பேட்டி:
தி.மு.க., அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள், தங்கள் பாக்கெட்டை நிரப்புவதில் மும்முரமாக உள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை மறைப்பதற்காக எங்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், அ.தி.மு.க., நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போடுகின்றனர்.

ஊழல், வசூல் செய்வது, பழிவாங்குதல் தான், அவர்கள் குறிக்கோளாக உள்ளது. உயர் அதிகாரிகளில் இருந்து, கடைநிலை ஊழியர்கள் வரை, பணியிட மாற்றம் செய்தது தான், அவர்கள் சாதனை.நுாறு நாட்களில், மக்கள் வேதனையும், சோதனையும் அடைந்துள்ளனர். ஜெயலலிதா அரசு போட்ட, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது. தி.மு.க., அமைச்சர்கள், 13 பேர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அதை வேகமாக முடிக்க, தி.மு.க., அரசு முற்பட்டுள்ளது. அதை மறைக்க, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது. சோதனை நடத்தி, அவதுாறு செய்தியை பரப்பி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில், சயன் கூட்டாளிகள், ஜெயலலிதா வசித்த இல்லத்திற்கு சென்று, கொள்ளையில் ஈடுபட்டதோடு, காவலாளியை கொலை செய்துள்ளனர். நீதிமன்றத்தில் விசாரணை முடியும் நிலையில், தி.மு.க., அரசு, புதிதாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது.அந்த வழக்கில், என்னையும், சிலரையும் சேர்ப்பதாக செய்திகள்
வந்துள்ளன. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இறுதி விசாரணையில் இருக்கும்போது, முதல்வர் மறு விசாரணை கேட்கிறார். குறுக்கு வழியில், வழக்கை திசை திருப்ப பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10+ 136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
20-ஆக-202116:34:26 IST Report Abuse
muthu DMK govt should investigate the source of income for koda nadu estate purchase. if corruption money is used for this purchase. pl takeover the property by govt.
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
20-ஆக-202114:56:26 IST Report Abuse
Tamilan சுடலைக்கு விக் நல்லா இல்லை......அதென்ன சட்டை காலர் பெரியதாக.........இவருக்கு போடும் மேக்கப் செலவுக்கும் தமிழக மக்கள் செலவு செய்ய வேண்டுமா?....ஒரு கோமாளிக்கு கூட அரசு பணம் செலவாகிறதே.... . என்ன ஜனநாயகம்
Rate this:
Cancel
20-ஆக-202113:02:53 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் 100 நாள் ஆட்சியில் வேதனை ::: யாருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X