பொது செய்தி

தமிழ்நாடு

கோட்டத்தில் 26 பேருக்கு கொரோனா

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, ராம் நகர் லே - அவுட், மகாலிங்கபுரம் நல்லப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று, இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி, சிங்காநல்லுார், ஜமீன் ஊத்துக்குளி, கோலார்பட்டியில் தலா ஒருவர்;

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, ராம் நகர் லே - அவுட், மகாலிங்கபுரம் நல்லப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று, இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி, சிங்காநல்லுார், ஜமீன் ஊத்துக்குளி, கோலார்பட்டியில் தலா ஒருவர்; சின்னாம்பாளையத்தில் ஐந்து பேர், என, ஒன்பது பேருக்கு கொரோனா உறுதியானது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனிக்கம்பட்டி, திப்பம்பட்டியில் தலா ஒருவர், சந்தேகவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தை மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என, ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒன்றியத்தில், மொத்தம், ஏழு பேருக்கு கொரோனா உறுதியானது.* ஆனைமலை தாலுகாவில், கோட்டூர், அங்கலகுறிச்சி, ஆனைமலை உள்பட, ஐந்து பகுதிகளில், ஏழு பேருக்கு கொரோனா உறுதியானது.* கிணத்துக்கடவு தாலுகாவில், தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது.* வால்பாறை தாலுக்காவில் கடந்த, பத்து நாட்களில், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று யாருக்கும், தொற்று பாதிப்பு இல்லை. அரசு கலைக்கல்லுாரி கொரோனா கேர் சென்டரில், தற்போது, நான்கு பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.வருவாய் கோட்டத்தில், நேற்று, 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களது வீடுகளில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவர்களுடன் வீட்டில் இருந்தோருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X