சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் மோதியதில் புள்ளிமான் பலி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கீழக்கரை : ஏர்வாடியில் இருந்து கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி பொட்டல்ஊரணியில் மூன்று வயது பெண் புள்ளிமான் தண்ணீர் குடிப்பதற்காக சாலையை கடக்கும் போது டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தது.உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் கீழக்கரை வன அலுவலகத்தினர் மானை ஊரணி கரையோரம் குழி தோண்டி புதைத்தனர்.ஏர்வாடி, மாயாகுளம்,

கீழக்கரை : ஏர்வாடியில் இருந்து கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி பொட்டல்ஊரணியில் மூன்று வயது பெண் புள்ளிமான் தண்ணீர் குடிப்பதற்காக சாலையை கடக்கும் போது டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தது.

உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் கீழக்கரை வன அலுவலகத்தினர் மானை ஊரணி கரையோரம் குழி தோண்டி புதைத்தனர்.ஏர்வாடி, மாயாகுளம், கொம்பூதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அரியவகை புள்ளிமான்கள் வனப் பகுதியில் வசித்து வருகின்றன.இந்நிலையில் ஊரணி கரையோரம் இரவு அதிகாலை நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்காகவருகின்றன. அப்போதுகுடியிருப்பு பகுதியில்இருந்து தெருநாய்களாலும் வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றன.எனவே மாவட்ட நிர்வாகம் மான்களின் வசிப்பிடங்களில் தண்ணீர் தொட்டிகளை கட்டி பராமரிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X