ராமநாதபுரத்தில்பூக்கள் விலை கிடு.. கிடு..| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில்பூக்கள் விலை கிடு.. கிடு..

Added : ஆக 19, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.நாளை ஆவணி முதல் முகூர்த்த நாள் என்பதால் அதிகளவு திருமணங்கள் நடப்பதாலும், மொகரம்,ஓணம் பண்டிகைகள் அடுத்தடுத்த நாட்களில் வருவதாலும் நேற்று ராமநாதபுரம் பூ மார்க்கெட்டில் விலை அதிகரித்தது.நேற்று முன்தினம் கிலோ ரூ.800க்கு விற்ற மல்லிகை 1200 ரூபாய், 400க்கு விற்ற பிச்சி பூ 800க்கும், 800க்கு விற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

நாளை ஆவணி முதல் முகூர்த்த நாள் என்பதால் அதிகளவு திருமணங்கள் நடப்பதாலும், மொகரம்,ஓணம் பண்டிகைகள் அடுத்தடுத்த நாட்களில் வருவதாலும் நேற்று ராமநாதபுரம் பூ மார்க்கெட்டில் விலை அதிகரித்தது.

நேற்று முன்தினம் கிலோ ரூ.800க்கு விற்ற மல்லிகை 1200 ரூபாய், 400க்கு விற்ற பிச்சி பூ 800க்கும், 800க்கு விற்ற கனகாம்பரம் 1400க்கும், 600க்கு விற்ற முல்லை 1200க்கும், 800க்கு விற்ற காக்கிரட்டை 1200க்கும், 100க்கு விற்ற சாமந்தி 400க்கும் விற்றது.இதனால் சில்லரை விற்பனை கடைகளில் விலை அதிகமாக இருந்தது.ஒரு முழம் மல்லிகை ரூ.150 வரை விற்கப்பட்டது. இதனால் பண்டிகை நாளில் பூக்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X