அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகம் முழுதும், கற்பித்தல் வாசிப்பு இயக்கம், அடுத்த ஆறு மாதங்களுக்கு, 200 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:கொரோனா காரணமாக, 2020 மார்ச், 20ல் இருந்து, பள்ளிகளை திறக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு முறையான கல்வி கற்பித்தலில் பெரும்

சென்னை:''தமிழகம் முழுதும், கற்பித்தல் வாசிப்பு இயக்கம், அடுத்த ஆறு மாதங்களுக்கு, 200 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:கொரோனா காரணமாக, 2020 மார்ச், 20ல் இருந்து, பள்ளிகளை திறக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு முறையான கல்வி கற்பித்தலில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும், குக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு, நோய் தொற்று காலத்தில், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை கொண்டு சேர்ப்பது, பெரும் சவாலாக உள்ளது.

கல்வி, 'டிவி' நிகழ்ச்சிகள், இணைய வழி கல்வி என, அரசு தொடர் முயற்சி மேற்கொண்டாலும், கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் ஏழை குழந்தைகளின், கல்வி செயல்பாடுகளை மேம்படுத்த முடியவில்லை.இதை உணர்ந்து, கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்புகளை சரி செய்ய, வகுப்பறைகளிலும், பள்ளி வளாகங்களிலும், கற்றல் கற்பித்தலை எடுத்து சென்றிட, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என, பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும், கற்றல் பாதிப்புகள் மட்டுமின்றி, 15 மாதங்களாக, பள்ளி வளாகத்தை விட்டு, குழந்தைகள் நீங்கி இருக்கும் சூழலில், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல். வாழ்வியல் மாற்றங்கள் போன்றவை குறித்தும், தீவிரமாக சிந்திக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதை கவனமாக ஆரய்ந்த பின், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்புகள், உளவியல் சிக்கல்கள் போன்றவற்றை சரி செய்திட, மாபெரும் கற்பித்தல் வாசிப்பு இயக்கம், தமிழகம் முழுதும் செயல்படுத்தப்படும்.

ஆசிரியர்கள், பட்டதாரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள் உதவியோடு, கல்வியாளர்கள் வழிகாட்டுதலோடு, பள்ளி கல்வித்துறை இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்லும்.வீதி தோறும் வகுப்பறை, மாலை நேரங்களில் நிலவொளி பள்ளி என, கடைக்கோடியில் வசிக்கும் குழந்தைகளின் இல்லம் தேடி, இந்த கற்பித்தல் வாசிப்பு இயக்கம், அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதற்கென நடப்பு நிதியாண்டில், 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு தியாகராஜன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X