பொது செய்தி

தமிழ்நாடு

காலாவதி விதை வாங்கி ஏமாற வேண்டாம்: மக்காச்சோள சாகுபடிக்கு 'அட்வைஸ்'

Added : ஆக 19, 2021
Share
Advertisement
நெகமம்;கிணத்துக்கடவு, நெகமம் மற்றும் கோமங்கலம்புதுார் பகுதியில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், மக்காச்சோள விதைப்புக்கு தயாராகியுள்ளனர்.கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் அறிக்கை:தமிழக அரசின் விதை சான்று துறையில், விற்பனை உரிமம் பெற்ற, விதை விற்பனை நிலையங்களில், பன்னாட்டு ரகங்கள், உள்ளூர் ரகங்கள் என,

நெகமம்;கிணத்துக்கடவு, நெகமம் மற்றும் கோமங்கலம்புதுார் பகுதியில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், மக்காச்சோள விதைப்புக்கு தயாராகியுள்ளனர்.கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் அறிக்கை:தமிழக அரசின் விதை சான்று துறையில், விற்பனை உரிமம் பெற்ற, விதை விற்பனை நிலையங்களில், பன்னாட்டு ரகங்கள், உள்ளூர் ரகங்கள் என, வீரிய ரகங்களின் விதைக்குவியல்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.தற்போது, மக்காச்சோளத்துக்கு நல்ல விலை இருப்பதால், விவசாயிகளும் தங்களுக்கு விருப்பமான விதைகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால், நெகமம், காட்டம்பட்டி, காட்டம்பட்டிபுதுார் மற்றும் கோமங்கலம்புதுார் பகுதிகளில், சுமார், ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.எனவே, உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில், விலை பட்டிலுடன் கூடிய, மக்காச்சோள விதை பாக்கெட்டுகளை வாங்க வேண்டும்.விதை பட்டியல் இல்லாமல், தோட்டத்துக்கு வந்து விற்பனை செய்பவர்களிடம், விதை வாங்கி ஏமாற வேண்டாம்.விற்பனை பட்டியலில் குறிப்பிட்டுள்ள ரகம், காலாவதி தேதி, குவியல் எண் ஆகியவற்றை கவனித்து வாங்க வேண்டும். விதை விற்பனையாளர்கள், தங்களிடம் உள்ள அனைத்து ரகங்களுக்கும், விதை முளைப்புத்திறன் பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும்.கொள்முதல் பட்டியல் மற்றும் உரிய பதிவுகள் இல்லாத ரகங்களை, விற்பனைக்கு வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X