பொது செய்தி

தமிழ்நாடு

செங்கமடை ஆறுமுககோட்டை எஞ்சிய பகுதிகள் பாதுகாக்கப்படுமா

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை பகுதியில், மன்னர்கள் கால ஆறுமுக கோட்டையின், எஞ்சிய சுவர் பகுதிகளை பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருச்சி--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை அமைந்துள்ளது. அப்பகுதியில் ராமநாதபுரம் சேது நாட்டை ஆட்சி செய்த முத்து விஜய ரகுநாத சேதுபதி, பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு செங்கமடை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை பகுதியில், மன்னர்கள் கால ஆறுமுக கோட்டையின், எஞ்சிய சுவர் பகுதிகளை பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை அமைந்துள்ளது. அப்பகுதியில் ராமநாதபுரம் சேது நாட்டை ஆட்சி செய்த முத்து விஜய ரகுநாத சேதுபதி, பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு செங்கமடை ஆறுமுக கோட்டையை கட்டினார். செங்கல், சுண்ணாம்பு சாந்து, போன்றவை கொண்டு இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை 6 இதழ்கள் உள்ள ஒரு மலர் போன்ற வடிவில் இருந்ததால், ஆறுமுக கோட்டை என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இக்கோட்டை உள் பகுதியில் இருந்து எதிரிகளை, சுவர்களின் வழியாக துப்பாக்கியால் சுடும் வகையில், துளைகள் அமைக்கப்பட்டிருந்தன. 1801ல் ஆங்கிலேயர்கள், சேதுபதி மன்னர்களின் பல கோட்டைகளை அழித்தபோது இக்கோட்டை சிதைக்கப்பட்டது. இதில் கோட்டையின் எஞ்சிய மதில் சுவர்கள் மட்டுமே மன்னர்கள் கால கோட்டை குறித்த அடையாளமாக உள்ளன.எனவே சேதுபதி மன்னர்கள் கால அடையாளமாகத் திகழும் இந்த கோட்டை மதில் சுவர்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X