அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வெளியேற்றம் அல்ல; வெளிநடப்பு தான்'

Added : ஆக 19, 2021
Share
Advertisement
அமைச்சர் துரைமுருகன்: நேற்று முன்தினம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டதாக, சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. செய்தியின் உள்ளே, வெளிநடப்பு செய்ததாக கூறி விட்டு, தலைப்பில், 'வெளியேற்றம்' என, குறிப்பிட்டுள்ளனர். இது, குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர்கள் வெளிநடப்பு செய்தனர்; வெளியேற்றம் செய்யப்படவில்லை. செய்தி வெளியிடும் போது, பத்திரிகையாளர்கள்

அமைச்சர் துரைமுருகன்:

நேற்று முன்தினம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டதாக, சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. செய்தியின் உள்ளே, வெளிநடப்பு செய்ததாக கூறி விட்டு, தலைப்பில், 'வெளியேற்றம்' என, குறிப்பிட்டுள்ளனர். இது, குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவர்கள் வெளிநடப்பு செய்தனர்; வெளியேற்றம் செய்யப்படவில்லை. செய்தி வெளியிடும் போது, பத்திரிகையாளர்கள் கவனமாக இருக்க, தாங்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு:

சபையில் நேற்று முன்தினம், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, என் அனுமதி பெறாமல், ஒரு பிரச்னையை கிளப்ப முயன்றார். அப்போதே, என்னுடைய அனுமதி பெறவில்லை. தவறான நடைமுறை என்று கூறினேன். எனினும், முதல்வராக, அமைச்சராக இருந்தவர், சபை விதிகளை அறிந்தவர் என்பதால் வாய்ப்பு வழங்கினேன்.முதல்வர், ஜனநாயக முறையில், இந்த சட்டசபை நடக்க வேண்டும் என்ற, கொள்கை உடையவர். அனைவரும் இணைந்து, மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

சட்டசபை ஆக்கப்பூர்வமாக, இழந்த பெருமையை மீட்க வேண்டும் என்ற நல்லெண்ணெத்தோடு செயல்பட, அறிவுரை வழங்கி உள்ளார்.எதிர்க்கட்சி தலைவர், மக்களுக்கான பிரச்னையை பேசுவார் என்று நினைத்து, அவரை பேச அனுமதித்தேன். அவரோ, அவர் சம்பந்தப்பட்ட பிரச்னையை எழுப்ப முயன்றார். தனிப்பட்ட பிரச்னையை, சபையில் பேசக் கூடாது. எனினும், அதையும் அனுமதித்தேன். அவர் பேசிய சில மணித் துளிகளில், பின்னால் இருந்த எம்.எல்.ஏ.,க்கள், என் அனுமதி பெறாமல், எதையோ எழுதி எடுத்து வந்த பதாகையை காண்பித்தனர்.

சபையில் காட்சிப் பொருளாக, எதையும் காண்பிக்க வேண்டும் என்றால், என் அனுமதி பெற வேண்டும்.அவ்வாறு, அவர்கள் அனுமதி பெறவில்லை. 'என்னுடைய அனுமதி இல்லாமல், எதையும் காட்டக் கூடாது. முறைகேடாக பதாகையை எடுத்து வந்துள்ளீர்கள். அனுமதியில்லாமல் பேசுவது தவறு. முதல்வர் பதில் கூறுகிறார். அனைவரும் அமருங்கள்' என்றேன்.

அப்போது, அவர்களாக சபையில் இருந்து வெளியேறினர்; நான் வெளியேற்றவில்லை. இனி வருங்காலங்களில், ஊடகங்கள் கவனமாக செய்திகளை வெளியிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X