அரசியல் செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரி சாலை சீரமைக்கப்படும்: வேலு

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: காங்., - ராஜேஷ்குமார்: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை செல்லும், 56 கி.மீ., சாலை, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை செல்லும் சாலை, 22 கி.மீ., நீளமுள்ளது. இந்த சாலைகள் முக்கியமானவை. இவை கேரளாவையும், தமிழகத்தையும் இணைக்கக் கூடியவை. இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள், 2016, 2019ம்
 கன்னியாகுமரி சாலை சீரமைக்கப்படும்: வேலு

சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

காங்., - ராஜேஷ்குமார்: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை செல்லும், 56 கி.மீ., சாலை, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை செல்லும் சாலை, 22 கி.மீ., நீளமுள்ளது. இந்த சாலைகள் முக்கியமானவை. இவை கேரளாவையும், தமிழகத்தையும் இணைக்கக் கூடியவை.

இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள், 2016, 2019ம் ஆண்டுகளில் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டாலும் செப்பனிடவில்லை. சாலைகள் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குழாய்கள் போடப்பட்டுள்ளன; இதுவும் போக்குவரத்துக்கு தடையாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில், பாதாள சாக்கடை குழாய் அமைக்க வேண்டி உள்ளது. இரு துறைகளையும் இணைத்து, சாலை அமைக்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: உறுப்பினர் கூறியது போல, அந்த சாலையில், 6 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் குழாய் உள்ளது. மத்திய அரசு நிதி பெற்று, எப்படியாவது சாலையை போட்டு தாருங்கள்.

அமைச்சர் வேலு: உறுப்பினர் கூறிய சாலையில், 6 கி.மீ.,ருக்கு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய் அமைக்கப்பட்டது. மற்ற பகுதிகளில், சாலை அடித்தளம் அமைக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சேதமடைந்த சாலையை சீரமைக்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்த பின், மேல் தள சாலை அமைக்கப்படும்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழியே, தற்போதைய சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.

பார்வதிபுரம் முதல் காவல் கிணறு வரை உள்ள சாலையில், பார்வதிபுரம் முதல், 3.60 கி.மீ., துாரத்திற்கு பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. விரைவில், சாலையை சீரமைக்க மாநகராட்சி உறுதி அளித்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில், சாலை சீரமைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-ஆக-202104:49:24 IST Report Abuse
meenakshisundaram அதுக்குள்ளே தலைமுடி எல்லாம் கொட்டி ராமே .சீக்கிரம் செய்யணும் -முன்னே பின்னே இருந்தாலும் பைசா விஷயம் .
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
20-ஆக-202118:58:34 IST Report Abuse
RaajaRaja Cholan களியக்காவிளை முதல் கன்னியாகுமாரி வரை சாலைகள் தரமற்றதாக இருக்கின்றது , கேரளா பார்டர் பாறசாலை முதல் சாலைகள் அருமையோ அருமை , கண்ணை மூடி பயணிக்கும் யாரும் , தமிழ்நாட்டிற்குள் வந்ததும் , ரோட்டின் தரம் ஆளை கண்ணயர விடாது . கேவலமான சாலைகள் , விரைவில் செப்பனிட வேண்டும்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
20-ஆக-202117:06:09 IST Report Abuse
DVRR அப்படிங்களா கமிஷன் ஏற்கனவே set ஆயிருச்சு இல்லேன்னா இவ்வளவு சீக்கிரம் சொல்லமாட்டேங்களே . படும் தானே????முடித்து வைக்கப்பட்டது என்னும் நிகழ் கால வினைச்சொல் தான் நாங்கள் எதிர் பார்ப்பது??? நிஜமாகவே ஆன பின் பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X