கன்னியாகுமரி சாலை சீரமைக்கப்படும்: வேலு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரி சாலை சீரமைக்கப்படும்: வேலு

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (4)
Share
சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: காங்., - ராஜேஷ்குமார்: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை செல்லும், 56 கி.மீ., சாலை, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை செல்லும் சாலை, 22 கி.மீ., நீளமுள்ளது. இந்த சாலைகள் முக்கியமானவை. இவை கேரளாவையும், தமிழகத்தையும் இணைக்கக் கூடியவை. இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள், 2016, 2019ம்
 கன்னியாகுமரி சாலை சீரமைக்கப்படும்: வேலு

சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

காங்., - ராஜேஷ்குமார்: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை செல்லும், 56 கி.மீ., சாலை, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை செல்லும் சாலை, 22 கி.மீ., நீளமுள்ளது. இந்த சாலைகள் முக்கியமானவை. இவை கேரளாவையும், தமிழகத்தையும் இணைக்கக் கூடியவை.

இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள், 2016, 2019ம் ஆண்டுகளில் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டாலும் செப்பனிடவில்லை. சாலைகள் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குழாய்கள் போடப்பட்டுள்ளன; இதுவும் போக்குவரத்துக்கு தடையாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில், பாதாள சாக்கடை குழாய் அமைக்க வேண்டி உள்ளது. இரு துறைகளையும் இணைத்து, சாலை அமைக்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: உறுப்பினர் கூறியது போல, அந்த சாலையில், 6 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் குழாய் உள்ளது. மத்திய அரசு நிதி பெற்று, எப்படியாவது சாலையை போட்டு தாருங்கள்.

அமைச்சர் வேலு: உறுப்பினர் கூறிய சாலையில், 6 கி.மீ.,ருக்கு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய் அமைக்கப்பட்டது. மற்ற பகுதிகளில், சாலை அடித்தளம் அமைக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சேதமடைந்த சாலையை சீரமைக்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்த பின், மேல் தள சாலை அமைக்கப்படும்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழியே, தற்போதைய சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.

பார்வதிபுரம் முதல் காவல் கிணறு வரை உள்ள சாலையில், பார்வதிபுரம் முதல், 3.60 கி.மீ., துாரத்திற்கு பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. விரைவில், சாலையை சீரமைக்க மாநகராட்சி உறுதி அளித்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில், சாலை சீரமைக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X