1 லட்சம் பனை விதை தருகிறேன்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'1 லட்சம் பனை விதை தருகிறேன்!'

Added : ஆக 19, 2021
Share
சட்டசபையில், நேற்று வேளாண் துறை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''பனை மரங்கள் பாதுகாப்பு திட்டத்திற்காக, என் சொந்த செலவில் ஆண்டுதோறும் 1 லட்சம் பனை மர விதைகளை தருகிறேன். அதை நேரடியாக தோட்டக்கலை துறையிடம் ஒப்படைத்து விடுகிறேன்,'' என்றார்.அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

சட்டசபையில், நேற்று வேளாண் துறை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''பனை மரங்கள் பாதுகாப்பு திட்டத்திற்காக, என் சொந்த செலவில் ஆண்டுதோறும் 1 லட்சம் பனை மர விதைகளை தருகிறேன். அதை நேரடியாக தோட்டக்கலை துறையிடம் ஒப்படைத்து விடுகிறேன்,'' என்றார்.

அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ''வேளாண் துறை அமைச்சர் எவ்வளவோ திட்டங்கள் குறித்து பேசினார். ''பனைமரங்கள் குறித்து பேசும் போது மட்டும், உங்கள் ஆர்வம் அதிகரித்து விடுகிறது,'' என, கிண்டலாக கூறினார். அதற்கு சபாநாயகர், ''பனை மரங்கள் எனது வாரிசு,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X