பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.எம்.இ.ஐ., எண் மாற்றுவது குற்றம்; சிவகங்கை எஸ்.பி., தகவல்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிவகங்கை : அலைபேசி சர்வீஸ், விற்பனை மையத்தில் சாப்ட்வேரை பயன்படுத்தி ஐ.எம்.இ.ஐ., எண்ணை மாற்றுவது சட்டப்படி குற்றம் என சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் தெரிவித்தார்.சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் காணாமல் போன 9.5 லட்சம் மதிப்புள்ள 52 அலைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் எஸ்.பி.,க்கள் வெற்றி செல்வன், முரளீதரன்,
 ஐ.எம்.இ.ஐ., எண் மாற்றுவது குற்றம்; சிவகங்கை எஸ்.பி., தகவல்

சிவகங்கை : அலைபேசி சர்வீஸ், விற்பனை மையத்தில் சாப்ட்வேரை பயன்படுத்தி ஐ.எம்.இ.ஐ., எண்ணை மாற்றுவது சட்டப்படி குற்றம் என சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் தெரிவித்தார்.

சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் காணாமல் போன 9.5 லட்சம் மதிப்புள்ள 52 அலைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் எஸ்.பி.,க்கள் வெற்றி செல்வன், முரளீதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், சைபர் கிரைம் எஸ்.ஐ., சபரிராஜன் பங்கேற்றனர்.எஸ்.பி., செந்தில்குமார் பேசியதாவது, சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் அலைபேசி ஐ.எம்.இ.ஐ., (16 இலக்க எண்) எண்ணை வைத்து காணாமல் போனதை கண்டறிந்துள்ளனர்.

அலைபேசி ஐ.எம்.இ.ஐ., எண் முக்கியம். ஆனால் அலைபேசி சர்வீஸ், விற்பனை மையங்களில் புதிய சாப்ட்வேர் பயன்படுத்தி ஐ.எம்.இ.ஐ., எண்களை மாற்றுவதாக புகார் வருகிறது. மாவட்ட அலைபேசி விற்பனை மையங்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போன்று இரண்டாம் தர அலைபேசி வாங்குவோர் ஒரிஜினல் பில், உரிமையாளர் உள்ளிட்டவற்றை தெரிந்து வாங்குங்கள். இல்லாவிடில் கொள்ளை, திருடிய அலைபேசியை வாங்கி போலீசில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.ஆந்திரா, கர்நாடகாவில் பதுக்கல்கொள்ளை, திருட்டு, காணாமல் போன அலைபேசிகளை பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகாவில் தான் விற்கின்றனர்.

சிவகங்கையில் காணாமல் போன அலைபேசிகளில் பெரும்பாலானை சென்னை, ஆந்திரா, திருச்சி, கர்நாடகாவில் இருந்து தான் மீட்டுள்ளோம். திருட்டு, கொள்ளை அடிக்கப்படும் அலைபேசிகள் பெரும்பாலும் இவ்விரு மாநிலங்களில் தான் பதுக்கி மலிவு விலைக்கு விற்கப்படுகின்றன என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X