சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெட்டூர் கண்மாய் குடிமராமத்தில் முறைகேடு: விவசாயிகள் போராட்டம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை அருகே நெட்டூர் கண்மாய் குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கண்மாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மானாமதுரை அருகே உள்ள நெட்டூர் கண்மாய் 760 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த கண்மாய் மூலம் மேலநெட்டூர், கீழநெட்டூர், ஆலம்பச்சேரி, தெற்கு குடியிருப்பு, கோவனுார், வேலடிமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி

மானாமதுரை : மானாமதுரை அருகே நெட்டூர் கண்மாய் குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கண்மாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மானாமதுரை அருகே உள்ள நெட்டூர் கண்மாய் 760 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த கண்மாய் மூலம் மேலநெட்டூர், கீழநெட்டூர், ஆலம்பச்சேரி, தெற்கு குடியிருப்பு, கோவனுார், வேலடிமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் இக்கண்மாய் குடிமராமத்து பணிக்காக 2020-21-ல் ரூ.85 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணியை மேற்கொண்ட பாசன விவசாயக்குழு, 50 சதவீத பணிகளை மட்டும் முடித்துவிட்டு மீதமுள்ள பணிகளை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டதாக கூறியும், குடிமராமத்து பணியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கண்மாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து

விவசாயிகள் கூறுகையில், குடி மராமத்து திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளத குறித்து விசாரணை நடத்த வேண்டும், பருவமழை தொடங்க உள்ள நிலையில்மீதமுள்ள பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றனர்.இதுகுறித்து பொதுப்பணித்றை அதிகாரிகள் கூறுகையில், 'குடிமராமத்து பணி நடந்த வரை ரூ.38 லட்சம் வரை நிதியை விடுவித்துஉள்ளோம். தொடர்ந்து பணியை மேற்கொள்ள விவசாயிகள் குழுவை வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X