சிவகங்கை கரும்பு விவசாயிகள் ஏமாற்றம்! கரும்புக்கான நிலுவை ரூ.26 கோடி| Dinamalar

தமிழ்நாடு

சிவகங்கை கரும்பு விவசாயிகள் ஏமாற்றம்! கரும்புக்கான நிலுவை ரூ.26 கோடி

Added : ஆக 19, 2021
Share
சிவகங்கை : மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.26 கோடியை அரசு மற்றும் கரும்பு ஆலை நிர்வாகம் வழங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு படமாத்துார் சக்தி சர்க்கரை ஆலைக்கு 1 லட்சம் டன் அரவைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது ஆலை இயங்காததால் கரும்பு அரவைக்கு எடுக்க முன்வராததால் விவசாயிகள் கரும்பு உற்பத்தியில்

சிவகங்கை : மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.26 கோடியை அரசு மற்றும் கரும்பு ஆலை நிர்வாகம் வழங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு படமாத்துார் சக்தி சர்க்கரை ஆலைக்கு 1 லட்சம் டன் அரவைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது ஆலை இயங்காததால் கரும்பு அரவைக்கு எடுக்க முன்வராததால் விவசாயிகள் கரும்பு உற்பத்தியில் இருந்து மாறி வருகின்றனர். நல்ல வரத்து காலத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் கரும்பு உற்பத்தியானது. காலப்போக்கில் அரவை மில் செயல்பாடின்றி குறைய தொடங்கிவிட்டன.

கடந்த ஆண்டு சக்தி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ.6 கோடி உள்ளது. இது தவிர வங்கி கடனுக்கு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.20 கோடி என ஒட்டுமொத்தமாக 26 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இத்தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் ஆலை நிர்வாகம் ஏமாற்றி வருகிறது. அரசு உடனே தலையிட்டு கரும்பு பாக்கியை பெற்றுத்தர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X