பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் தற்காலிக தலைவர் பதவி ரத்து: கலெக்டர் உத்தரவு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியின் பொறுப்பு தலைவராக இருந்த பாண்டியராஜனின் பதவியை ரத்து செய்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி, பிரியதர்ஷினி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். அப்போதிருந்த தேர்தல் அலுவலர்கள் இருவரையும் வெற்றி பெற்றதாக மாறி மாறி அறிவித்தனர். இதனால் சர்ச்சை எழுந்தது. இருவரும்

காரைக்குடி : காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியின் பொறுப்பு தலைவராக இருந்த பாண்டியராஜனின் பதவியை ரத்து செய்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி, பிரியதர்ஷினி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். அப்போதிருந்த தேர்தல் அலுவலர்கள் இருவரையும் வெற்றி பெற்றதாக மாறி மாறி அறிவித்தனர். இதனால் சர்ச்சை எழுந்தது. இருவரும் நீதிமன்றத்திற்கு சென்றதால் வழக்கு நடந்து வருகிறது. இதனால், துணை தலைவர் பாண்டியராஜனுக்கு தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கினர்.

இவரது பதவி காலத்தில் விதிகளை மீறி வரிவிதிப்பு, பெயர் மாற்றம் செய்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக கலெக்டருக்கு புகார் சென்றது. இதனால் அவரது பொறுப்பு தலைவர் பதவியை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவு வரும் வரை சாக்கோட்டை பி.டி.ஓ.,விற்கு தலைவருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவர் பாண்டியராஜன் 2 ம் நிலை அலுவலராக பணிபுரிய அனுமதித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X