கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா கேட்ட ராஜேந்திர பாலாஜிக்கு ஐகோர்ட் கண்டனம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013 வரை, வருமானத்திற்கு அதிகமாக, 7 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள் சேர்த்துஉள்ளார். 'அவர் மீது நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்' எனக்

சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013 வரை, வருமானத்திற்கு அதிகமாக, 7 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள் சேர்த்துஉள்ளார். 'அவர் மீது நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், ஏப்ரல் 3ல் தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோர், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி சத்திய நாராயணன், 'சொத்து குவிப்பு புகார் குறித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

நீதிபதி ஹேமலதா, 'நீண்ட இடைவெளிக்கு பின் வழக்கு பதிந்து விசாரிப்பதால், எந்த பலனும் இல்லை' எனக்கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.


கடும் எதிர்ப்பு



இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக, நீதிபதி எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.இந்த வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். 'அதனால், வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்' என, ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.'இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடன், பிழைகள் கொண்ட மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, விசாரணைக்கு பட்டியலிட முடியாதபடி, ராஜேந்திர பாலாஜி தரப்பினர் முயல்கின்றனர். 'எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்' என, வாதிட்டார்.


தள்ளி வைப்பு

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, 'இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக்கூடாது. 'மேல்முறையீட்டு வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை எனில், அடுத்த விசாரணையின் போது, இந்த வழக்கின் விசாரணை நடைபெறும்' என தெரிவித்து, வழக்கு விசாரணையை செப்., 1க்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X