கோடநாடு கொலை வழக்கு: சிக்கும் தலைகள் யார்?| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை வழக்கு: சிக்கும் 'தலைகள்' யார்?

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (8)
Share
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதன் பின்னணி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு, கவர்னரை சந்தித்து மனு என, கோடநாடு கொலை வழக்கு, அ.தி.மு.க.,விலும், தமிழக அரசியல் அரங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்திஉள்ளது. முன்னாள் முதல்வர் பழனிசாமியை, இந்த வழக்கில் சேர்க்க முயற்சி நடக்கிறது என்பது தான் அ.தி.மு.க.,
கோடநாடு, கொலை வழக்கு, சிக்கும் தலைகள்,

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதன் பின்னணி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு, கவர்னரை சந்தித்து மனு என, கோடநாடு கொலை வழக்கு, அ.தி.மு.க.,விலும், தமிழக அரசியல் அரங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்திஉள்ளது. முன்னாள் முதல்வர் பழனிசாமியை, இந்த வழக்கில் சேர்க்க முயற்சி நடக்கிறது என்பது தான் அ.தி.மு.க., தலைவர்களின் அச்சமாக உள்ளது.

இது குறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:கோடநாடு எஸ்டேட் பங்களாவில், கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் மர்ம மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.கோடநாடு கொலை வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போலீஸ் மறு விசாரணையை துவக்கியிருப்பது கவனிக்கத்தக்கது. அ.தி.மு.க., ஆட்சியின்போதே இவ்வழக்கை முடிக்க, ஐந்தே மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.ஆயினும், முக்கிய சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாத காரணத்தால், வழக்கை முடிக்க முடியவில்லை. இதனால், இப்போது முறைப்படி கோர்ட்டில் அனுமதி பெற்று, விசாரணையை மீண்டும் துவக்கியுள்ளனர். முக்கியக் குற்றவாளி சயானின் புதிய வாக்குமூலம், அ.தி.மு.க., தலைவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


மர வியாபாரி


'கோடநாடு பங்களாவில் மர வேலைகளைச் செய்து வந்தவர் சொல்லித்தான் திட்டத்தை நிறைவேற்றினோம். மிக முக்கிய நபருக்காக இதைச் செய்ய வேண்டும் என அவர் சொன்னார்' என, சயான் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த சாதாரண மர வியாபாரி, ஜெயலலிதா இருக்கும் வரை, கட்சியில் பொறுப்பில் இல்லை. பின்னாளில் அவர், பெரும் நிறுவனத்தின் முதலாளியாக உருவெடுத்தார்; கட்சியிலும் செல்வாக்கு பெற்றார். தற்போது, இவ்வழக்கின் பிடி, இவரை நோக்கியே நகர்கிறது. இவ்வாறு, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீசாரின் கூற்றுப்படி, மர வியாபாரி கைது செய்யப்பட்டு, அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அ.தி.மு.க., முக்கிய புள்ளியும் வழக்கில் சேர்க்கப்பட்டால், அது அ.தி.மு.க.,விற்குள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதமும் இப்போது சூடு பிடிக்கத் துவங்கிஉள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அனுதாபிகள் கூறுகையில், 'எங்களுக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'பங்களாவில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பது சசிகலாவுக்கே தெரியும். அவர் வாய் திறந்தால், இன்னும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரலாம். 'முக்கிய புள்ளிகள், தங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதற்காகவே அந்த கொள்ளை முயற்சியை அரங்கேற்றி இருப்பதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன' என்றனர்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X