பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டம்: 21 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
உடுமலை:வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், 21 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.வனத்துக்குள் திருப்பூர் -7 திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உடுமலை பகுதிகளில், விவசாய நிலங்கள், தொழில் நிறுவன வளாகங்கள், கோழிப்பண்ணை வளாகங்கள் மற்றும்
 வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டம்: 21 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

உடுமலை:வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், 21 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.வனத்துக்குள் திருப்பூர் -7 திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உடுமலை பகுதிகளில், விவசாய நிலங்கள், தொழில் நிறுவன வளாகங்கள், கோழிப்பண்ணை வளாகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த, இரண்டு மாதத்தில், 21 ஆயிரத்து, 223 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.நேற்று , மடத்துக்குளம் அருகேயுள்ள மடத்துாரில், விவசாயி கவுதமுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், சந்தனம், செம்மரம், புங்கன், நாவல், நீர் மருது, வன்வளி, தேக்கு என, 697 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மரங்களுக்கு சொட்டு நீர் பாசன வசதி மற்றும் பாதுகாப்பு வேலியுடன், மரச்சாகுபடி திட்டமாக, இங்கு நடவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், புங்கன், பூவரசு, சிசு என, 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. தலைமை ஆசிரியை பரிமளா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X