பொது செய்தி

தமிழ்நாடு

'3 நாட்களுக்கு கன மழ

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலுார், ராணிப்பேட்டை,

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலுார், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில், நாளை சில இடங்களில் கன மழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும். பல இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.வரும் 23ம் தேதி, உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு நாளை வரை செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X