இந்தியா

மேற்கு வங்க வன்முறை வழக்கு சி.பி.ஐ., - எஸ்.ஐ.டி.,க்கு மாற்றம்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோல்கட்டா :மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடந்த பயங்கர வன்முறையில், கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி சி.பி.ஐ., விசாரணைக்கும், மற்ற சம்பவங்களை, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும் மாற்றி, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி
மேற்கு வங்க வன்முறை வழக்கு சி.பி.ஐ., - எஸ்.ஐ.டி.,,ற்றம்

கோல்கட்டா :மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடந்த பயங்கர வன்முறையில், கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி சி.பி.ஐ., விசாரணைக்கும், மற்ற சம்பவங்களை, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும் மாற்றி, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.


உத்தரவு



மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி, முடிவுகள் வெளியாயின. இதில், திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.தேர்தல் முடிவுகள் வெளியான பின், மாநிலத்தில் பயங்கர வன்முறை அரங்கேறியது. இதில், 16 பேர் உயிரிழந்தனர். திரிணமுல் காங்., தொண்டர்கள் நடத்திய தாக்குதலில், பா.ஜ., தொண்டர்கள் ஆறு பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.
மேலும், பெண்கள் பலர் மானப்பங்கப்படுத்தபட்டனர். பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

இது பற்றி கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, தேசிய மனித உரிமை கமிஷனுக்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கமிஷனும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தி, தன் அறிக்கையை, கடந்த மாதம் 15ல், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், 'தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் கட்சி ஆதரவாளர்கள், பிரதான எதிர்க்கட்சி யினர் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.'இதில் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன. இது பற்றி சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

வழக்கு விசாரணையை, வேறு மாநில நீதிமன்றத்தில் நடத்த வேண்டும்' எனக் கூறியிருந்தது.இதற்கிடையே, வன்முறை குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடகோரி, உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, மேற்கு வங்க அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், 'தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கை, அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
'வன்முறை தொடர்பாக ஆய்வு செய்த கமிஷனின் உறுப்பினர்களுக்கு, பா.ஜ.,வுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது' என்றார்.இந்நிலையில், கோல்கட்டா உயர் நீதிமன்றம், நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின் ஏற்பட்ட வன்முறையில் நடந்த கொலைகள், பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடப்படுகிறது.
வன்முறையின் மற்ற சம்பவங்களை, எஸ்.ஐ.டி., விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இதற்காக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமன் பாலா சஹோ, சவுமென் மித்ரா, ரன்பீர் குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விசாரணைகளும், உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடக்கும். விசாரணைக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news




வரவேற்பு

கோல்கட்டா உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி, திரிணமுல் காங்., மூத்த தலைவர் சவுகதா ராய் கூறுகையில், ''உயர் நீதிமன்ற தீர்ப்பு அதிருப்தியளிக்கிறது. சட்டம் - ஒழுங்கு விஷயம் மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது.
''இது குறித்து சி.பி ஐ., விசாரிக்க உத்தரவிட்டது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல். இந்த உத்தரவை எதிர்த்து, மேற்கு வங்க அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்யப்படும்,'' என்றார்.
பா.ஜ., பொதுச் செயலரும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவருமான கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ''திரிணமுல் காங்., தொண்டர்கள், மாநில அரசின் பாதுகாப்புடன் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.
''இதை, தேசிய மனித உரிமை கமிஷனும், கோல்கட்டா உயர் நீதிமன்றமும் உறுதிபடுத்தியுள்ளன. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை பா.ஜ., வரவேற்கிறது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-ஆக-202109:20:14 IST Report Abuse
duruvasar நாட்டில இருக்கிற எல்லா எதிர்கடட்சிகளும் இந்த நீதியரசரின் முடிவை கண்டித்து உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரிடம் மனுசிங் சிங்வி தலைமையில் மனு கொடுக்கலாம்.
Rate this:
Cancel
R.M.Muthu - Guangzhou,சீனா
20-ஆக-202108:55:36 IST Report Abuse
R.M.Muthu நாட்டில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
20-ஆக-202108:33:37 IST Report Abuse
Duruvesan எங்கெல்லாம் துரோகிகள் உள்ளார்களோ அங்கெல்லாம் காங்கிரஸ் மற்றும் தீயமுக வக்கீல்கள் இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X