சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள் லாபமானவை!

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, 'எலக்ட்ரிக்' வாகனங்களை ஏன் வாங்க வேண்டும் என விளக்குகிறார் மோட்டார் வாகன நிபுணர் டி.முரளி: பெட்ரோல் விலை, லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி விட்டது. எலக்ட்ரிக் வாகனங்களை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான், தமிழகம் உட்பட பல மாநிலங்கள் மானியம் வழங்குகின்றன. அது போக, மத்திய அரசின் மானியமும் கிடைக்கிறது. வாகனங்களை
சொல்கிறார்கள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, 'எலக்ட்ரிக்' வாகனங்களை ஏன் வாங்க வேண்டும் என விளக்குகிறார் மோட்டார் வாகன நிபுணர் டி.முரளி: பெட்ரோல் விலை, லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி விட்டது. எலக்ட்ரிக் வாகனங்களை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான், தமிழகம் உட்பட பல மாநிலங்கள் மானியம் வழங்குகின்றன. அது போக, மத்திய அரசின் மானியமும் கிடைக்கிறது. வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருள் செலவு, வெகுவாக குறையும்.

பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை ஒருவர், 60 கி.மீ., ஓட்டுகிறார் என்றால், அதற்கு அவர், 105 ரூபாய் எரிபொருள் செலவாக செய்ய நேரிடும். அதுவே, எலக்ட்ரிக் வாகனத்தில் வெறும், 15 ரூபாய் தான் ஆகும்.எனினும், எலக்ட்ரிக் வாகனத்தின் விலை அதிகம் தான். அதற்காகத் தான் மத்திய, மாநில அரசுகள் மானியம் அளிக்கின்றன. மானியத்திற்கு பிறகும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை, பெட்ரோல் வாகனத்தின் விலையை விட சற்று அதிகமாகத் தான் இருக்கும்.ஆனால், பெட்ரோல் செலவுடன் கணக்கிடும் போது, 18 மாதங்களிலேயே, வாகனம் வாங்க செலவு செய்த தொகையை நாம் எடுத்து விடலாம்.எனினும், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு இருக்கும் வசதி, கார்களுக்கு இன்னும் வரவில்லை. இருசக்கர வாகனங்களை 'சார்ஜ்' செய்ய, வீடுகளில் உள்ள சாதாரண மின் இணைப்பு மூலமே மேற்கொள்ள முடியும். ஆனால், கார்களுக்கு, பெட்ரோல் பங்க் போன்ற மையங்களில் தான் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.சாதாரணமாக வீடுகளில் தான் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றால், 16 மணி நேரம் ஆகும். மேலும், எலக்ட்ரிக் வாகனங்கள் பராமரிப்பு மிகவும் எளிது.


ஒரு பெட்ரோல் வாகனம் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்க, 2,500 பாகங்கள் அசைந்து கொண்டிருக்கும். ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களில், 50 பாகங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும். அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.தேய்மானத்தை சரி செய்வதற்காகத் தான் பெட்ரோல் வாகனங்களை அடிக்கடி சர்வீஸ் விடுகிறோம். எலக்ட்ரிக் வாகனத்தில் தேய்மானம் வெகு குறைவு என்பதால், 'சர்வீஸ்' செய்வதும் அடிக்கடி தேவையற்றது.சாதாரண வாகனங்களின் இன்ஜினில் சூடு, 600 டிகிரி இருக்கும். ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களில் அந்த அளவு இருக்காது. பிற வாகனங்களுக்கு கிரீஸ், 1 கிலோ, 600 ரூபாய்க்கு தேவைப்படும். ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 50 கிராம் கிரீஸ் போதும்.இப்போதைய நிலையில், பணத்தை யாரும் பெரிதாக நினைப்பதில்லை. சார்ஜ் செய்யும் வசதிக்குறைவு தான், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தடையாக உள்ளது. அதை சரி செய்தால், எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சூடுபிடிக்க துவங்கிவிடும்!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krush - Pallavaram, Chennai,இந்தியா
20-ஆக-202112:24:00 IST Report Abuse
Krush You have mentioned so many advantages about using electric vehicles... what about the situation w.r.t. disposing the used batteries, which are going to pollute the environment.? did any one thought about this? hope you have read the recent article about China facing huge problem in disposing old and used batteries..
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
20-ஆக-202109:19:06 IST Report Abuse
venkates வரியற்ற முறையில் விற்பனை செய்தால் எல்லோரும் வாங்க முன் வருவார்
Rate this:
Cancel
Sankar Narayanan - Chennai,இந்தியா
20-ஆக-202108:49:30 IST Report Abuse
Sankar Narayanan உண்மை.அதோடு எலக்ட்ரிக் வாகனங்கள் புகை மாசு வெளிப்படுத்துவதில்லை ஆகவே சுற்றுச்சூழல் மாசு படுவது வெகுவாக குறைகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X