பொது செய்தி

தமிழ்நாடு

நூல் விலை ஏற்றத்தால் ஜவுளி தொழில் பாதிப்பு; பாதுகாப்பு இயக்கம் மூலம் தொடர் மனு கொடுக்க முடிவு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : நுால் விலை ஏற்றத்தால் ஜவுளி தொழில் பாதிப்படைந்துள்ள நிலையில் இதன் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் தாலுகா அலுவலகத்தில் பகுதி வாரியாக தொடர் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.அருப்புக்கோட்டையில் பாலி காட்டன், காட்டன் சேலைகள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆறு மாதமாக காட்டன் நுால், பாலியஸ்டர் நுால் இழைகள் 30 சதவீதம் விலையேற்றப்பட்டுள்ளது. 160 தக

அருப்புக்கோட்டை : நுால் விலை ஏற்றத்தால் ஜவுளி தொழில் பாதிப்படைந்துள்ள நிலையில் இதன் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் தாலுகா அலுவலகத்தில் பகுதி வாரியாக தொடர் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டையில் பாலி காட்டன், காட்டன் சேலைகள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆறு மாதமாக காட்டன் நுால், பாலியஸ்டர் நுால் இழைகள் 30 சதவீதம் விலையேற்றப்பட்டுள்ளது. 160 தக சேலைக்காண பாலியஸ்டர் இழைரூ. 7500 முதல் ரூ. 8000 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 9 ஆயிரம் முதல் 9 ஆயிரத்து 400 வரை விற்கப்படுகிறது.

ஒரு பெட்டி 60 ரக கழிநுால் ரூ. 1,200 முதல்ரூ. 1450 ரூபாய் இருந்த நிலையில், தற்போது ரூ. 1700 முதல்ரூ.1950 வரை விற்கப்படுகிறது.மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்த நிலையில் உற்பத்தி சேலைகளை குறைவான விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜவுளி தொழில் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் - நெசவாளர்கள் நல பாதுகாப்பு இயக்கம் மூலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒவ்வொரு பகுதி வாரியாக நெசவாளர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் மனு கொடுக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X