பொது செய்தி

தமிழ்நாடு

வன்முறைக்கு இரையாகும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ஒன்று முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளை பாதுகாக்கவும், துன்பச்சூழல்களை குறைத்து, வலிமைமிக்க சூழ்நிலையை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்படுகிறது. இத்துறையின் பணிகள்,நலத்திட்ட உதவிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.வசந்தகுமார் கூறியதாவது:குழந்தைகளை பாதுகாப்பதில் உங்கள் பங்குமாவட்டத்தில்

ராமநாதபுரம் : ஒன்று முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளை பாதுகாக்கவும், துன்பச்சூழல்களை குறைத்து, வலிமைமிக்க சூழ்நிலையை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்படுகிறது.

இத்துறையின் பணிகள்,நலத்திட்ட உதவிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.வசந்தகுமார் கூறியதாவது:குழந்தைகளை பாதுகாப்பதில் உங்கள் பங்குமாவட்டத்தில் ஒரு அரசு மற்றும் தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் 18 என மொத்தம் 19 குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. இங்கு கழிப்பறை, குடிநீர், அடிப்படை வசதிகளை அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனை வழங்குகிறோம். காப்பகங்கள் மூலம் 850 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

இவர்களுக்கு தேவையான கல்வி, உடை,மேல்படிப்பு என 18 வயது வரை உதவி வழங்கப்படுகிறது.யார் வேண்டுமானாலும் குழந்தை பாதுகாப்பு மையம் தொடங்க முடியுமாசமூக பாதுகாப்புதுறையின்கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலகு மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.குழந்தைகள் இல்லம்நெறிப்படுத்துதல் 2015ன் சட்டப்படி காற்றோட்ட மான துாய்மையான அறை, கழிப்பறை, குடிநீர்,டைனிங்ஹால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப் படும்.

குழந்தைகளுக்கான திட்டங்கள் பற்றிமாவட்டத்தில் பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற சூழல், குழந்தை தொழிலாளர், பிச்சையெடுப்பவர், வீட்டை விட்டு ஓடிவந்தவர், வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையால் பாதிக்கப்படும் குழந்தை கண்டறிந்து41குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் 3 ஆண்டுகள் அல்லது 18 வயது வரை வழங்கப்படுகிறது.மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் தன்மையை பொறுத்து ரூ.3லட்சம் முதல் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி

குழந்தை தத்தெடுக்க விரும்பும் நபர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை அணுகலாம். சாரா, காரா என்ற மத்திய,மாநில தத்துவள ஆதார மையம் இணையதளத்தில் முன்பதிவுசெய்ய வேண்டும்.இதில் முன்னுரிமை அடிப்படையில் நேர்முகதேர்விற்கு அழைக்கப்படுவர். அப்போது ஆண்டு வருமானம், மருத்துவசான்றிதழ், குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றிற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தாண்டு மட்டும் 30 பேர் பதிவுசெய்துள்ளனர்.

மேலும் வயதான பெற்றோர், தனிநபர் வாரிசுக்காகவும் 6 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களை தத்தெடுக்கலாம். இதற்கு போலீஸ் நற்சான்று அவசியம். இம்மாதிரி 4 குழந்தைகள்வாரிசாக தத்தெடுத்துஉள்ளனர். இக்குழந்தைகளுக்கும் 18 வயது வரை தொடர்ந்து மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறதேபெண்ணிற்கு 18 வயது, ஆணிற்கு 21 வயது முடியாமல் திருமணம் செய்யக்கூடாது. பெற்றோரின் அறியாமை, ஜாதிபிரச்னை, காதல் விவகாரம், குடும்ப வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தை திருமணங்கள் நடக்கிறது. இந்தாண்டு மட்டும் இது வரை 30 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். முழுமையாக நிறுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இது குறித்து 04567-- 231 098 அல்லது சைல்டு லைன் 1098 எண்களில் புகார் அளிக்கலாம். தற்போது நடமாடும் வாகனம் மூலம் ரயில்நிலையம், பஸ் ஸ்டாண்ட், நகர், கிராமப் பகுதிகளில் விழிப் புணர்வு ஏற்படுத்துகிறோம்.கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவி எப்படிகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், இருவரும் இல்லாதவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் இம் மாதிரி 105 குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 33 குழந்தைகளுக்கு நிவாரணதொகை வழங்கியுள்ளோம்

மேலும் மாதந்தோறும்ரூ.3ஆயிரம், பள்ளி, கல்லுாரிகளில் இலவசமாக கல்விபயில நிதியுதவி வழங்கப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது.குழந்தைகளுக்கு எதிரானஉரிமை மீறல், வன்முறைக்கு இரையாகும் குழந்தைகளின் மறுவாழ்வை உறுதி செய்வது,குழந்தைகளின் பாதுகாப்பு, சேவைகள், திட்டங்கள், அமைப்பு பற்றியும், சட்டங்கள் பற்றி மக்களிடையே கொண்டு சேர்க்க மாவட்டக்குழு, ஒன்றிய அளவிலான பாதுகாப்புக்குழு, கிராமஅளவில் பாதுகாப்பு குழு அமைத்துள்ளோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X