பொது செய்தி

தமிழ்நாடு

மனக்கவலைகள் போக்கும் வன்னி விநாயகர்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சாத்துார் : சாத்துாரில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் கன்னியாகுமரி நான்குவழிச்சாலை யொட்டி உள்ளது மடம் சின்ன ஓடைப்பட்டி. இங்குள்ள வன்னி விநாயகர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற் கொண்ட போது தங்கள் ஆயுதம் , கவச உடைகளை இக்கோயில் வன்னிமரத்தின் பொந்தில் வைத்து விட்டு, வன வாசம் காலம் முடிந்த பின் அவற்றை எடுத்து போரிட்டு வெற்றி பெற்றதாக

சாத்துார் : சாத்துாரில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் கன்னியாகுமரி நான்குவழிச்சாலை யொட்டி உள்ளது மடம் சின்ன ஓடைப்பட்டி. இங்குள்ள வன்னி விநாயகர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற் கொண்ட போது தங்கள் ஆயுதம் , கவச உடைகளை இக்கோயில் வன்னிமரத்தின் பொந்தில் வைத்து விட்டு, வன வாசம் காலம் முடிந்த பின் அவற்றை எடுத்து போரிட்டு வெற்றி பெற்றதாக புராணம் கூறுகிறது.

வன்னி என்றால் வெற்றி என பொருள். வன்னிமரத்தை வலம் வந்தால் நினைத்த காரியம் வெற்றிபெறும், திருமணத்தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். இதன் இலை, காய் பயணத்தின் விபத்து ஏற்படாமல் காக்கும் கவசம் என்கின்றனர் இக்கிராம மக்கள்.சாத்துார் சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி கோவில்பட்டி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, சங்கரன்கோவில் பகுதி மக்களும் இவ்வழியாக செல்லும் போது வன்னி விநாயகரை தரிசித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வேண்டியவர்களின் மனக்கவலை போக்கும் தெய்வமாக வன்னி விநாயகர் விளங்குகிறார். மார்கழியில் இக் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை திறந்திருக்கும்.பூஜை விபரங்களுக்கு 99949 03796ல் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X