சர்வர் பிரச்னையால் இ-சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சர்வர்' பிரச்னையால் இ-சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி

Added : ஆக 20, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்தில் சர்வர் பிரச்னையால் பலமணிநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்படுகின்றனர்ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையத்திற்கு ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டில் பெயர் மாற்றம், புகைப்படம் எடுக்க என தினமும் பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.இவர்களுக்கு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்தில் சர்வர் பிரச்னையால் பலமணிநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்படுகின்றனர்

ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையத்திற்கு ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டில் பெயர் மாற்றம், புகைப்படம் எடுக்க என தினமும் பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.இவர்களுக்கு டோக்கன் வழங்கி வரிசைப்படி விண்ணப்பங்கள்ஆன்லைனில் பதிவு செய்வது, ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடக்கிறது.

இந்நிலைமையில் கடந்த 2 நாட்களாக சர்வர் பிரச்னையால் பணிகள் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதனால் வயதானவர்கள்,குழந்தைகளுடன் வரும் பெண்கள் பலமணிநேரம்காத்திருந்து சிரமப்படுகின்றனர். இ-சேவைமையத்தில் சர்வர் பழுதை செப்பனிட்டு சேவையை விரைவுப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X