புதுமாயாகுளம் ஊராட்சி 4, 6வது வார்டுஉறுப்பினர் தேர்தல் நடத்த வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதுமாயாகுளம் ஊராட்சி 4, 6வது வார்டுஉறுப்பினர் தேர்தல் நடத்த வலியுறுத்தல்

Added : ஆக 20, 2021
Share
ராமநாதபுரம் : திருப்புல்லாணி ஒன்றியம் புதுமாயாகுளம் ஊராட்சியில் 4, 6 வார்டுகளுக்கு மீண்டும் தேர்தல்நடத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்கள் கலெக்டரிடம்கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: புதுமாயாகுளம் வாக்குச்சாவடி எண் 100ல் 4, 6 ஆகிய ஊராட்சி வார்டு வாக்காளர்கள் ஓட்டுச்சீட்டில் புதுமாயாகுளம் என்பதற்கு பதிலாக அருந்தியர் காலனி என அச்சடிக்கபட்டு

ராமநாதபுரம் : திருப்புல்லாணி ஒன்றியம் புதுமாயாகுளம் ஊராட்சியில் 4, 6 வார்டுகளுக்கு மீண்டும் தேர்தல்நடத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் கலெக்டரிடம்கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: புதுமாயாகுளம் வாக்குச்சாவடி எண் 100ல் 4, 6 ஆகிய ஊராட்சி வார்டு வாக்காளர்கள் ஓட்டுச்சீட்டில் புதுமாயாகுளம் என்பதற்கு பதிலாக அருந்தியர் காலனி என அச்சடிக்கபட்டு இருந்தது. இதன் காரணமாக தேர்தல் நாள் அன்று இரு வார்டு வாக்காளர்களும் குழப்பம் அடைந்து உண்மையான சுய விலாசத்தின் பெயரில்ஓட்டுச்சீட்டு வழங்க தேர்தல் அலுவலரிடம் முறையிட்டனர்.

உரிய பதில் கிடைக்காததால் நீண்டநேரம் காத்துஇருந்து ஓட்டளிக்காமல் சென்றுவிட்டனர். அதன்பின் கோரிக்கை நிறைவேற்றுவதாக அதிகாரிகள்கூறியதால் ஒருசிலர் மட்டும் ஓட்டளித்தனர். நுாறு சதவீதம் ஓட்டளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் புதுமாயாகுளம் ஊராட்சி 4, 6வது வார்டுகளில் இடைத்தேர்தலாக மீண்டும் ஜனநாயக முறைப்படி கிராம மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X