பொது செய்தி

தமிழ்நாடு

பெருநாழி பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெருநாழி : பெருநாழி பஸ் ஸ்டாண்டிற்கு அரசு டவுன் பஸ்கள் இரவு நேரத்தில் வர மறுப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.அருப்புக்கோட்டை டிப்போவில் இருந்து பெருநாழி வழியாக சாயல்குடிக்கு இரு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.பகல் நேரங்களில் பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே வந்து சென்றாலும் இரவு 8:40, 9:20 மணிக்கு பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே செல்லாமல் மெயின் ரோட்டிலேயே இறக்கி

பெருநாழி : பெருநாழி பஸ் ஸ்டாண்டிற்கு அரசு டவுன் பஸ்கள் இரவு நேரத்தில் வர மறுப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

அருப்புக்கோட்டை டிப்போவில் இருந்து பெருநாழி வழியாக சாயல்குடிக்கு இரு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.பகல் நேரங்களில் பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே வந்து சென்றாலும் இரவு 8:40, 9:20 மணிக்கு பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே செல்லாமல் மெயின் ரோட்டிலேயே இறக்கி விடுகின்றனர்.பெருநாழியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பெருநாழி வழியாக அருப்புக்கோட்டை செல்லும் பஸ்கள் மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றனர்.

இதனால் மாற்றுத்திறனாளிகளும், கர்ப்பிணி, முதியவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர். பல சமயங்களில் பயணிகளுக்கும், பஸ் டிரைவர் கண்டக்டருக்கும் அடிக்கடிவாக்குவாதங்கள் ஏற்படுகிறது. போக்குவரத்து துறை நிர்வாகம் இரவு நேரங்களில் பஸ் பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X