பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச போட்டியில் பங்கேற்க உதவி கேட்கும் சிலம்பம் வீரர்கள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விருதுநகர் : சர்வதேச போட்டியில் பங்கேற்க அரசிடம் உதவி கேட்டு விருதுநகரில் விஜயன் அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விருதுநகர் நகராட்சி பூங்காவில் விஜயன் அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பு சார்பில் 73 பேருக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆக.7ல் பஞ்சாபில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் இந்த அமைப்பில் இருந்து 4 மாணவிகள், 8 ஆண்கள்,
 சர்வதேச போட்டியில் பங்கேற்க உதவி கேட்கும் சிலம்பம் வீரர்கள்

விருதுநகர் : சர்வதேச போட்டியில் பங்கேற்க அரசிடம் உதவி கேட்டு விருதுநகரில் விஜயன் அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விருதுநகர் நகராட்சி பூங்காவில் விஜயன் அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பு சார்பில் 73 பேருக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆக.7ல் பஞ்சாபில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் இந்த அமைப்பில் இருந்து 4 மாணவிகள், 8 ஆண்கள், பங்கேற்று தலா 5 தங்க பதக்கங்கள், வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர்.

செப். 14ல் நேபாளில் போக்ராவில் நடக்க உள்ள சர்வதேச போட்டியிலும் இதே 12 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் கலெக்டர் மேகநாதரெட்டியை சந்தித்து சர்வதேச போட்டியில் பங்கேற்க உதவி கேட்டுள்ளனர். அவரும் வசதி செய்து தருவதாக கூறி உள்ளார். தமிழக அரசும் நிதியுதவி செய்ய கேட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X