கோயில் நடைமுறைகளை மாற்றாதீங்க; ஹிந்து சமுதாய கூட்டமைப்பு வலியுறுத்தல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் நடைமுறைகளை மாற்றாதீங்க; ஹிந்து சமுதாய கூட்டமைப்பு வலியுறுத்தல்

Added : ஆக 20, 2021
Share
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றக்கூடாது என அனைத்து ஹிந்து சமுதாய கூட்டமைப்பினர் சார்பில் கோயில் செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.இக்கோயிலில் அர்ச்சகர், அரையர், மடப்பள்ளி பணிகளுக்கு காலங் காலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளை மாற்றி பிற நபர்களை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றக்கூடாது என அனைத்து ஹிந்து சமுதாய கூட்டமைப்பினர் சார்பில் கோயில் செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

இக்கோயிலில் அர்ச்சகர், அரையர், மடப்பள்ளி பணிகளுக்கு காலங் காலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளை மாற்றி பிற நபர்களை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணகார்த்திக் தலைமையில் அனைத்து ஹிந்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகிகள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவிடம் முறையிட்டனர் .

ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பு, பா.ஜ., மாவட்ட செயலாளர் சரவண துரைராஜா பங்கேற்றனர்.செயல் அலுவலர் இளங்கோவன்: மனு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பணியாளர்கள் நியமனத்தில் விதிமுறைகள் மீறல் இருக்காது, என்றார்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X