எல்லாமே ஓடையில் தான்... பரவுது விதவிதமான நோய்கள்; அவதியில் அருப்புக்கோட்டை ஜவஹர் சங்கம் மக்கள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உள்ள பிரதான ஓடையில் முட்புதர்கள் குப்பை,கழிவு நீர் செப்டிக் டேங்க் கழிவு என அனைத்தும் கலப்பதால் விதவிதமான நோய்கள் உருவாக ஜவஹர் சங்கம் பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர்.இப்பகுதி சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு இங்குள்ள ஓடை வழியாகதான் மழை நீர் சென்றடையும். நகரின் பல பகுதிகளை இந்த ஓடை கடக்கிறது. ஓடையை துார்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உள்ள பிரதான ஓடையில் முட்புதர்கள் குப்பை,கழிவு நீர் செப்டிக் டேங்க் கழிவு என அனைத்தும் கலப்பதால் விதவிதமான நோய்கள் உருவாக ஜவஹர் சங்கம் பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர்.

இப்பகுதி சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு இங்குள்ள ஓடை வழியாகதான் மழை நீர் சென்றடையும். நகரின் பல பகுதிகளை இந்த ஓடை கடக்கிறது. ஓடையை துார் வாராமல் விட்டதால் செடிகள், மரங்கள் வளர்ந்து ஓடையை மூடி உள்ளது. பல பகுதி வீடுகளின் கழிவு நீர் ஓடையில் விடப்படுகிறது. புதர்களால் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் புகலிடமாக மாறி விட்டது.

இரவு நேரங்களில் இவை வெளியில் வந்து ஓடைக்கு அருகில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். தேங்கிய கழிவுநீரால் கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகிறது. ஓடையில் இருபுறமும் நடை மேடை இருந்த நிலையில் தற்போது குப்பை கொட்டி நடக்க முடியாத அளவிற்கு செய்து விட்டனர். ஓடையில் வேறு செப்டிக் கழிவுகளை குழாய்கள் மூலம் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 'பிளான்ட்' பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. நகராட்சி துாய்மை பணியாளர்கள் இப்பகுதியில் எட்டி கூட பார்ப்பதில்லை.சாக்கடை கழிவு நீர், குப்பையை இப்பகுதியினரே சுத்தம் செய்கின்றனர்.சிறிய பிரச்னைகளை கூட நகராட்சி நிர்வாகம் சரி செய்வது இல்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X