கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னைக்கு மாறுகிறது தமிழ் கல்வெட்டு படிகள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுரை:மைசூரு மத்திய ஆய்வகத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுப் படி ஆவணங்களை சென்னைக்கு மாற்ற, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரையைச் சேர்ந்த மணிமாறன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், பழமையான கல்வெட்டுகள் உள்ளன. இவை படிகள் எடுக்கப்பட்டு, கர்நாடகமாநிலம், மைசூரில் உள்ள மத்திய கல்வெட்டு ஆய்வு மையத்தில் உள்ளன. இவை, தமிழர்களின் வரலாற்றை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யும்

மதுரை:மைசூரு மத்திய ஆய்வகத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுப் படி ஆவணங்களை சென்னைக்கு மாற்ற, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த மணிமாறன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், பழமையான கல்வெட்டுகள் உள்ளன. இவை படிகள் எடுக்கப்பட்டு, கர்நாடகமாநிலம், மைசூரில் உள்ள மத்திய கல்வெட்டு ஆய்வு மையத்தில் உள்ளன. இவை, தமிழர்களின் வரலாற்றை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யும் ஆதாரங்கள். மைசூரு மையத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுப் படிகளை தமிழகத்திற்கு மாற்ற வேண்டும். அவற்றை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி, பாதுகாக்க அரசுக்கு உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசுவாமி உத்தரவு:மைசூரு மையத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுப் படிகளின் ஆவணங்களை, ஆறு மாதங்களுக்குள் சென்னை மத்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும். சமஸ்கிருதம் உட்பட சில மொழிகளுக்கு உள்ளது போல், சென்னையில் தமிழ் கல்வெட்டு ஆய்வுப் பிரிவு தனியாக துவக்க வேண்டும்.இதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற, தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மொழிக்கும் உள்ள கல்வெட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வெட்டு ஆய்வாளர்களை மத்திய தொல்லியல் துறை நியமிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X