பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வாழ்வு மலரட்டும் - இன்று மொகரம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் முஹ்ரம் எனப்படும் மொகரம். ஜனநாயகத்தின் சிறப்ப மகள்ளாட்சியின் மாண்பைக்காப்பதற்ாக நாயகத்தின் பேரர்ஹலரத் ஹூசைன் கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈத்த நிகழ்வு மொகரம் பத்தாம் நாளில் அரங்கேறியது.நாயகத்தின் காலத்திற்கு முன்பிருந்த இம்மாதத்திற்கு எனத் தனிச்சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. யூதர்களும்
 
புதிய வாழ்வு மலரட்டும் - இன்று மொகரம்

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் முஹ்ரம் எனப்படும் மொகரம். ஜனநாயகத்தின் சிறப்ப மகள்ளாட்சியின் மாண்பைக்காப்பதற்ாக நாயகத்தின் பேரர்ஹலரத் ஹூசைன் கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈத்த நிகழ்வு மொகரம் பத்தாம் நாளில் அரங்கேறியது.

நாயகத்தின் காலத்திற்கு முன்பிருந்த இம்மாதத்திற்கு எனத் தனிச்சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. யூதர்களும் இந்த நாளில் நோன்பு நோற்றுள்ளனர்.
பிர் அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து மூஸா அவர்களையும், அவர்களின் மக்களையும் இறைவன் ஈடேற்றும் பெற வைத்த சிறப்பு இம்மாதத்திற்கு உண்டு. மொகரம் பத்தாம் நாளில் மூஸா நோன்பு நோற்றார்கள்.

மொகரம் மாதத்தின் 9,10-ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். இந்த நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்கு உரிய சிறிய பாவங்களை போக்கும் என்கிறார் நாயகம். இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மொகரம் மாதத்தின் பத்தாம் நாளில் ஹலரத் ஹூசைன் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்கள் மூலம் கூட்டங்கள், புத்தக வெளியீடு விழாக்கள் நடத்த வேண்டும். இந்நாளில் புதிய வாழ்வு மலர வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X