சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டன்ட் மாஸ்டர் வீட்டில் பணம், பரிசுகள் திருட்டு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
குடியாத்தம்:சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் பணம், பரிசு கோப்பைகள் திருட்டு போயின.வேலுார் மாவட்டம், குடியாத்தம் தர்ணம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம், 92. சினிமா ஸ்டன்ட் மாஸ்டர். கடந்த 16ம் தேதி, சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.இந்நிலையில், நேற்று காலை அவர் வீடு திறந்து கிடப்பதை பார்த்த உறவினர்கள், தகவல் தெரிவித்தனர். நேற்று காலை, 10:00
 ஸ்டன்ட் மாஸ்டர் வீட்டில் பணம், பரிசுகள் திருட்டு

குடியாத்தம்:சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் பணம், பரிசு கோப்பைகள் திருட்டு போயின.வேலுார் மாவட்டம், குடியாத்தம் தர்ணம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம், 92. சினிமா ஸ்டன்ட் மாஸ்டர்.

கடந்த 16ம் தேதி, சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.இந்நிலையில், நேற்று காலை அவர் வீடு திறந்து கிடப்பதை பார்த்த உறவினர்கள், தகவல் தெரிவித்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு ஜூடோ ரத்தினம் வீட்டுக்கு வந்தபோது, முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்ததில், பீரோவை உடைத்து அதிலிருந்த, 15 பட்டு சேலைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், வெள்ளி, தங்கத்தால் ஆன, 50க்கும் மேற்பட்ட பரிசு கோப்பைகள், இரண்டு ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. மகளிடம் கொடுப்பதற்காக, நகைகளை சென்னைக்கு எடுத்துச் சென்று இருந்ததால், அவை திருடு போகாமல் தப்பின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X