பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் இன்ஜின் சோதனை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:பாம்பன் பாலத்தில் 52 நாட்களுக்கு பின், ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பாம்பன் ரயில் பாலத்தில், ஜூன் 28ல் பயணியருடன் ரயில் சென்றபோது, துாக்கு பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது. இதனால், அன்று முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.உப்பு காற்றால் சேதமடைந்த துாக்கு பால இரும்பு பிளேட், துாண்களை அகற்றி
 பாம்பன் பாலத்தில் இன்ஜின் சோதனை

ராமேஸ்வரம்:பாம்பன் பாலத்தில் 52 நாட்களுக்கு பின், ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பாம்பன் ரயில் பாலத்தில், ஜூன் 28ல் பயணியருடன் ரயில் சென்றபோது, துாக்கு பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது. இதனால், அன்று முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.உப்பு காற்றால் சேதமடைந்த துாக்கு பால இரும்பு பிளேட், துாண்களை அகற்றி புதுப்பிக்கும் பணியால், செப்., 15 வரை ரயில் போக்குவரத்திற்கு தெற்கு ரயில்வே தடை விதித்தது.

இந்நிலையில், துாக்கு பாலத்தின் திறன் குறித்து ஆய்வு செய்ய, 52 நாட்களுக்கு பின் நேற்று ரயில்வே பொறியாளர்கள் 10 கி.மீ., வேகத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தினர்.பாலத்தில் அதிர்வு ஏற்படவில்லை எனவும், செப்., 15க்குள் மராமத்து பணியை முடித்து ரயில் போக்குவரத்து துவங்கும் எனவும், ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X