பொது செய்தி

தமிழ்நாடு

இந்த கலெக்டர் காலத்திலாவது விமான நிலையம் விரிவடையுமா?

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை:விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், துரித நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டர் சமீரன் களம் இறங்கியுள்ளார். முதல் கட்டமாக, கையகப்படுத்தவுள்ள நிலத்தின் வரைபடத்தை, நேற்று முன் தினம் பார்வையிட்டார்.தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமையவுள்ள, விமானநிலையங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி, 5 முதல் 80 சதவீதம் வரை நிறைவு

கோவை:விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், துரித நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டர் சமீரன் களம் இறங்கியுள்ளார். முதல் கட்டமாக, கையகப்படுத்தவுள்ள நிலத்தின் வரைபடத்தை, நேற்று முன் தினம் பார்வையிட்டார்.தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமையவுள்ள, விமானநிலையங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி, 5 முதல் 80 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது.ஆனால், தொழில் நகரங்களான கோவை மற்றும் சேலத்தில், இதுவரை பணி துவக்கப்படவில்லை. கோவை விமான நிலையத்துக்கு தேவையான, 627.89 ஏக்கர் நிலம், 24 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.இதில், 134.2 ஏக்கர், ராணுவத்தின் வசம் உள்ளது. 28 ஏக்கர் புறம்போக்கு வகையை சார்ந்தது. மீதமுள்ள நிலம், தனியார் வசம் உள்ளது.இதை கையகப்படுத்தும் பணி, கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நீண்ட இழுபறியில் உள்ள, இந்த நிலம் கையகப்படுத்தும் பணியின்போது, பல மாவட்ட கலெக்டர்கள் வந்து சென்றாலும், கையகப்படுத்தும் பணி துவக்க நிலையிலேயே உள்ளது.முதல் கட்டமாக அரசு, கையகப்படுத்தும் பணிக்கு, 263 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதில், இதுவரை 168 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைவுபடுத்தவும், தற்போதைய நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும், மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று முன் தினம், ஆய்வு மேற்கொண்டார்.விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், வருவாய் துறையினர், கையகப்படுத்த வேண்டிய நிலம் குறித்தும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், மாவட்ட கலெக்டரிடம் விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X