பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை காமராஜ் பல்கலையை வழிநடத்த கன்வீனர் குழு அமைப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை காமராஜ் பல்கலையை வழிநடத்த, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் தலைமையில், சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன் - கவர்னர் பிரதிநிதி, மேஷாக் பொன்ராஜ் - பல்கலை பிரதிநிதி கொண்ட கன்வீனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.மதுரை காமராஜ் பல்கலை சிறப்பு சிண்டிகேட் கூட்டம், உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் தலைமையில், இணைய வழியில் நடந்தது. உறுப்பினர்கள் டாக்டர்

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையை வழிநடத்த, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் தலைமையில், சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன் - கவர்னர் பிரதிநிதி, மேஷாக் பொன்ராஜ் - பல்கலை பிரதிநிதி கொண்ட கன்வீனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை சிறப்பு சிண்டிகேட் கூட்டம், உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் தலைமையில், இணைய வழியில் நடந்தது. உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தீனதயாளன், மேஷாக் பொன்ராஜ், பதிவாளர் - பொறுப்பு வசந்தா பங்கேற்றனர்.

இதில், 'தேர்வு செய்யப்பட்ட கன்வீனர் குழு, பல்கலையை வழி நடத்துவதுடன், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவில் இடம் பெற வேண்டிய செனட் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பணியையும் மேற்கொள்ளும்' என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X